பக்கம்:ராஜாம்பாள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்திரி புருஷ சம்பாஷணை 1 :

சலும் இருமலும் வந்துவிட்டன. டாக்டரைக் கூட்டிக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டுமென்று சொன்னேன். டாக்டருக்கு ஒன்றும் தெரியாது என்றும், அந்தத் தடிய னைக் குழந்தைக்கு வைத்தியஞ் செய்யச்சொன்னல் கட்டாயமாய்க் குழந்தை இறந்து போகுமென்றும் சொல்லி, நாட்டு வைத்தியணுகிய அப்பாவுப் பண்டிதனைக் கூட்டி வந்து காண்பித்தாய். அவன், சுமார் ஐந்நூறு கோழி முட்டைகளைக் கொண்டுவந்து தைலம் இறக்கி நவரத்தின மெழுகு செய்யவேண்டும்; அதற்காக நவரத்தி னங்கள் வாங்கவேண்டும்’ என்று நூறு ரூபாய் கேட்டான். இவன் நவரத்தினமேது, வாங்குவதேது, இது மோசம் என்று சொன்னேன், பனப்பேய் பிடித்துக்கொண்டு குழந்தைக்குச் செலவுசெய்யாமல் குழந்தையைக் கொல் லப்போகிறேனென்றும், இன்னும் இதைப்போல அநேக வார்த்தைகள் செர்ல்லித் துாற்றிஞய். உன் வார்த்தைக் காக நூறு ரூபாய் அழுதேன். மூன்று வேளை மருந்து குழந்தை சாப்பிட்டவுடனே மருந்தின் குணத்தால் குழந்தை பரமபதம் அடைந்தது.

கனகவல்லி டாக்டர் மருந்து கொடுத்திருந்தால் மட்டும் குழந்தை இப்போது உயிருடன் இருக்குமோ? அதற்குக் கடன் அவ்வளவுதான். கடைசிக் கடன் பண்டிதனுக்குச் சேரவேண்டி யிருந்தது; அது சேர்ந்த வுடனே குழந்தையும் விண்ணுலகு சேர்ந்தது. அதற்கு என்னைப் பழிப்பானேன்? போகட்டும், அப்பால் சொல் லுங்கள்.

சாமிநாத சாஸ்திரி. மூன்றாவது குழந்தை சீதைக்கு முதுகில் ராஜபிளவை புறப்பட்டது. நான் டாக்டரைக் கொண்டுவந்து அதிக ஜாக்கிரதையாய் வைத்தியம் செய்து அறுக்கவைத்தேன். புண்ணும் நாளுக்கு நாள் ஆறிக்கொண்டே வந்தது. புண்ணை ஜல் தியாய் ஆருமல் மெதுவாக ஆறும்படி வைத்துப் பணம் பறிப்பதற்கு டாக்டர் ஜாலம் செய்கிருரென்று, நான் வெளியே போய் வருவதற்குள் உனக்குப் பிடித்த பண்டிதனேக் கூப்பிட்டுக் காண்பித்தாய். அவன். அதை நன்றாய் அறுத்து ஒரு பச் சிலே வைத்துக் கட்டிவிட்டால் மறுநாளைக்குள் முக்கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/15&oldid=677381" இலிருந்து மீள்விக்கப்பட்டது