பக்கம்:ராஜாம்பாள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 78 இராஜாம்பாள்

டப்பட்டு இன்றுதான் கடைசி விசாரணையில் இருக்கிரு ரென்றும் உடனே வந்து நான் சாட்சி சொல்லாவிட்டால் மரண தண்டனை விதித்து விடுவார்களென்றும் ஆகையால் உடனே இங்கே வர வேண்டுமென்றும் சொன்னர். இதைக் கேட்டவுடனே இங்கே ஜல் தியாக வந்து சேரவேண்டு மென்ற எண்ணம் எனக்கிருந்தாலும் அவர் காயங்களுக்கு வைத்தியம் செய்துகொண்டு அப்பாற் போகலாமென்று என்னுற் கூடியவரையிற் சொல்லியும் அவர் கேளாததால் மோட்டார் வண்டியில் ஏறி இவ்விடம் வந்து சேர்ந்தோம். இராஜாம்பாள் அடைந்த கஷ்ட நிஷ்டுரங்களைச் சொல்லக் கேட்டவர்களில் நடேச சாஸ்திரி, லோகசுந்தரி, மணவாள நாயுடு ஆகிய இம் மூன்று பேர்களைத் தவிர மத்றவர்கள் எல்லோரும் சகிக்க முடியாமல் அழுதார்கள். துரைசாமி ஐயங்கார்: ஜனவரிமீ 26வ. ராத்திரி உல களத்த பெருமாள் கோவில் தெருவில் போய்ப் பார்த்த போது கோபாலனைக் காணுேமென்றும், வேறே எவரோ உட்கார்ந்திருந்ததாகவும் சொன்னயே. அவர் இன்னு ரென்று உனக்குத் தெரியுமா? தெரியாதா ?

இராஜாம்பாள்: அந்தக் கேள்விக்கு ஜவாப்புச் சொல்ல என்னுல முடியாது.

துரைசாமி ஐயங்கார்; உன்னுல் சொல்ல முடியா தேன்றால் உனக்குத் தெரிந்து சொல்லமாட்டேன் என்கிருபா, அல்லது அந்த ஆளையே இதுவரையில் நீ பார்த்ததில்லையா?

இராஜாம்பாள். நான் பார்த்து அநேக வருஷங்கள் இருக்கலாம். -

துரைசாமி ஐயங்கார்: போகட்டும்; அநேக வருஷங் களுக்கு முன்னுலாவது பார்த்திருக்கிருயல்லவா? ஆகையால் இன்னரென்று உனக்குத் தெரியுமென்று ஏற்படுகிறது.

இராஜாம்பாள். எனக் குத் தெரியுமென்றே வைத்துக் கொள்வோம். எனக்குச் சொல்ல இஷ்டமில்லை.

துரைசாமி ஐயங்கார்: ராஜாம்பாள்! நீ சிறுபிள்ளை யானதால் நியாய ஸ்தலங்களில் இப்படிப் பேசுவதால் வரும் கெடுதியை அறியமாட்டாய். தாயாயிருந்தாலும் பின்ளேயாயிருந்தாலும் உள்ளதை உள்ளபடி சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/182&oldid=684724" இலிருந்து மீள்விக்கப்பட்டது