பக்கம்:ராஜாம்பாள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு கோரமான கொலே 7

இதற்குள்ளாக வண்டி கர்நாடக ரெயில் நிலையத் துக்கு வந்து சேர்ந்தது. இவர்கள் ரெயில்வண்டி ஏறி ஞர்களோ இல்லையோ, வண்டியும் புறப்பட்டுவிட்டது. காஞ்சீபுரம் போய்ச் சேர்ந்தவுடனே ரெயிலி விருந்து இறங்கிச் சாமிநாத சாஸ்திரி வீடுபோய்ச் சேர்ந்தார்கள். சாஸ்திரி துரைசாமி ஐயங்காரைக் கண்டவுடனே ஓவென்று அழ, அவர் சமாதான ஞ் செய்ததுஞ் சற்றுத் தேறிக் கோபாலன் கொலைசெய்தே இருக்கமாட்டானென்றும், போலீசார் கட்டுமானஞ் செய்திருப்பார்களென்றும், வாஸ்தவத்திற் கொலைசெய்தவனைக் கண்டுபிடிக்க வேண்டு மென்றும் சொன்னர். அப்பால் துரைசாமி ஐயங்கார் கோவிந்தனை அழைத்துவந்த விவரம் தெரிந்தவுடனே சாஸ்திரி கோவிந்தனே அழைத்து வரச்சொல்வி, வாஸ்தவ மாய்க் கொலைசெய்தவனைக் கண்டுபிடித்துத் தண்டனை அடையும்படி செய்தால் பதின யிர ரூபாய் இனும் அளிப்ப தாகச் சொன்னர். அதன்பேரில் கோவிந்தன் நடந்த விருத்தாந்தங்களைச் சொல்லச் சொன்னவுடனே சாமிநாத சாஸ்திரி பின்வருமாறு சொல்ல ஆரம்பித்தார்:

சாமிநாத சாஸ்திரி. ராத்திரி இரண்டு மணிக்கு மாப்பிள்ளை ஊர்வலம் வந்து சேர்ந்தவுடனே நிச்சய தார்த்த நகைகளைப் பெண்ணுக்குப் போடப் பெண்ணைத் தேடினுேம். பெண்ணை எங்கும் காணுமையால் அங்கே வந்திருந்த இன்ஸ்பெக்டர் மணவாள நாயுடுவைக் கண்டு பிடிக்கச் சொன்னுேம், அதன்பேரில் அவர் ராஜாம் பாளுடைய கைப்பெட்டியைத் திறந்து காண்பிக்கச் சொல்லிப் பார்த்ததில் அதில் கோபாலனிடத்திலிருந்து வந்த கடிதம் ஒன்று அகப்பட்டது. அதில் பின்வருமாறு எழுதியிருந்தது :

கடிதம்

17, இராஜ வீதி, காஞ்சி. எனது பிரியமுள்ள ராஜத்திற்கு,

நான் எல்லாம் தீர்மானஞ் செய்துகொண்டு உனக்குத் தெரிவிப்பதாகச் சொல்வியிருந்தேன் அல்லவா ? உலகளந்த பெருமாள் கோவில் தெருவில் 25-வது நெம்பருள்ள வீடு உனக்குத் தெரியுமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/79&oldid=684621" இலிருந்து மீள்விக்கப்பட்டது