பக்கம்:ராஜாம்பாள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 இராஜாம்டாள்

பிட்டுச் செய்யச்சொன்னல் செய்துவிடுகிருன். அதற்கு நீ மத்தியஸ்தம் எதற்கு? மேலும் அவர்களுக்கு ஏன் இனும் கொடுக்கவேண்டும்? என்னிடங்கூடவா மணவான நாயுடு லஞ்சம் வாங்குவான்? - -

ராமண்ணு: ஆனல் இப்படிச் செய்யவேண்டுமென்று சொல்லிவிடுகிறேன். தாங்கள் சொல்லி மணவாள நாயுடு அப்படிச் செய்தால் நான் என் கழுத்தை இரண்டு துண் டாக வெட்டிக்கொண்டு விடுகிறேன். ஏழை இப்படி அகம்பாவம் பிடித்துப் பேசுகிறேனென்று எஜமானவர் களுக்குக் கோபம் வரக்கூடாது. எஜமானவர்களுக்குச் சகல விதமான அதிகாரங்கள் இருந்தாலும் இந்தக் காரியத்தை அடியேன் மூலமாக நடத்தினால் நடக்கும்ே அல்லது எஜமானவர்களாகச் செய்தால் ஒன்றும் நடக்கப் போகிறதில்லை.

நீலமேக சாஸ்திரி: என்ன செய்யவேண்டும் என் பதைச் சொல்லி, நான் சொன்னல் ஏன் நடக்காது என் பதற்குக் காரணத்தையுஞ் சொல்லு, பார்ப்போம்.

ராமண்ணு: பொன்விளைந்த களத்துாரில் ரங்கநாத முதலியார் வீட்டில் தீவட்டிக் கொள்ளையடித்து நகைகள் திருட்டுப்போனது தங்களுக்குத்தெரியுமல்லவா?அந்த நதை களெல்லாம் ஒன்றுவிடாமல் அகப்பட்டுவிட்டன. அந்தச் சமாசாரம் தங்களுக்குத் தெரியாது. அப்படி அகப்பட்ட நகைகளில் பாதிக்குமேல் தங்க நகைகள். அவற்றையெல் வாம் உருக்கிக் கணக்குப் பிரகாரம் பங்கு போட்டாகி விட்டது. தீவட்டிக் கொள்ளைபோட்டு நகை திருடினவர் களைக் குற்றவாளிகளாகக் கொண்டுவந்தால் அவ்ர்கள் எல்லா நகைகளும் போலீசார்வசம் அகப்பட்டனவென்று சொல்வதன்றி இவர்கள் உருக்கின இடம், விற்ற இடம் முதலானவற்றைச் சொல் விவிடுவார்கள். மேலும், இனிமேல் இவர்களைத் திருடர் நம்பவும் மாட்டார்கள், அநேகமாய்த் திருடரும் சில போலீசாரும் பாகஸ்தர் களான படியால் வாஸ்தவமாய்த் திருடின குற்றவாளிகளை அவர்கள் காண்பித்துக் கொடுக்கிறதில்லை. வே.ே யாரையாவதுதான் குற்றவாளிகளாக ஏற்படுத்தவேண் டும். ஆகையால் அந்த நகைகளிற் சிலவற்றைக் கொண்டு வந்து சாமிநாத சாஸ்திரி வீட்டில் வைத்து, திருட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/44&oldid=677410" இலிருந்து மீள்விக்கப்பட்டது