பக்கம்:ராஜாம்பாள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்திரி புருஷ சம்பாஷணை {}

போயின. முன் ஜன்மத்தில் செய்த கருமத்திற்கேற்ற படி உனக்கு ஈசுவரன் அப்படிப் புத்தி கொடுக்கிரு. னென்று நினைத்துக்கொண்டு நான் உன்னை ஒன்றும் சொல்வதில்லை. நீ என்மேல் பழிபோட்டதால் உண்மை யைச் சொன்னேன். :

கனகவல்லி என்னுடைய முட்டாள்தனத்தாலும் கைகண்ட மாத்திரை கொடுத்து வைகுண்ட யாத்திரை அனுப்பும் டாக்டர் வார்த்தையைக் கேளாத தலுைம் பிள்ளைகள் செத்துப்போயின என்கிறீர்களே. அது என்ன சமாசாரம்? சொல்லுங்கள், பார்ப்போம்.

சாமிநாத சாஸ்திரி. ஒவ்வொன்றாய்ச் சொல்லு கிறேன். கவனமாய்க் கேள். இனிமேலாவது இதை யெல்லாம் கவனம் வைத்து நடப்பாயென்று சொல்லு கிறேன். நமது ஜேஷ்டபுத்திரன் துரீநிவாசனுக்குப் பால் ஜீரணமாகாமல் வாந்தியும் பேதியும் ஆகிக்கொண் டிருந்ததே. அப்போது டாக்டர் வந்து பார்த்து அந்தக் குழந்தையின் குடல் அதிக பலவீனமாயிருப்பதால் பால் அதிகம் கொடுக்கக் கூடாதென்றும், அரைமணி அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பால் கொடுக்கவேண்டுமென்றும் சொன்னுர், நானும் அவர் சொன்னபடி செய்வதே சிலாக்கியமென்று சொன் னேன். நீ அதைக் கொஞ்சமாவது லட்சியம் பண்ணுமல், பால் சரியாய்க் கொடுக்காவிட்டால் குழந்தை இளைத் துப்போகுமே, என்ன செய்வதென்று நினைத்து வேளைக்குக் கால்படி பாலுக்குக் குறையாமல் கொடுத்தாய் அதன் முடிவு குழந்தை கரையாமல் முன்றாம் நாள் குழியில் வைக்கும்படி நேர்ந்தது.

கனகவல்லி. அந்த டாக்டரோ, டிக்டரோ, அந்தப் பரமதடியனுக்கு ஒன்றும் தெரியாது. நான் முதலிலேயே அந்தச் சாப்பாட்டுராமனுக்கு ஒன்றும் தெரியாதென் றும், நம் நாட்டு வைத்தியணுகிய பண்டிதனேக் கூப்பிட்டு விட்டால் கண்மூடி விழிப்பதற்குள் செளக்கியப்படுத்தி விடுவானென்றும் செர்ன்னேன். நீங்கள் கேட்கவில்லே, குதிரை செத்ததுமல்லாமல் அதற்குக் குழிவெட்டப் பத்துப் பணம் என்பதுபோல் நம் குமாரன் செத்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/13&oldid=677379" இலிருந்து மீள்விக்கப்பட்டது