பக்கம்:ராஜாம்பாள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜாம்பாளும் சாமிநாத சாஸ்திரியும் 59

திரா விசனத்தை அடையும்படி செய்தேன். ஆகையால் நான் ஜிவித்திருப்பதால் என் பிராணனுக்குமேல் அதிகப் பிரியமாய்ப் பார்க்கும் இருவருக்கும் விசனம் உண்டாகும்: அப்படி அவர்கள் விசனத்தை அடைந்துகொண் டிருப் பதைப் பார்ப்பதைவிட நான் பிராணத் தியாகம் செய்து கொள்வதே நலமல்லவா ? -

இராஜாம்பாள். அப்பா என்னவோ சொல்லுகிறீர் கள். காரியம் இன்னதென்று சொல்லவில்லை. மேலும் நீங்கள் பிராணத் தியாகம் செய்துவிட்டால் அப்பால் உல கத்திலே எனக்கு என்ன வேலை? உங்களுக்கு மறுமை யிலும் சிசுருவுை செய்வதற்காக நானும் உங்கள் பின்ன லேயே பிராணனை விட்டுவிடுகிறேன். எப்போது நான் பிராணனை விட்டுவிட்டேனே என் அந்தரங்கப் பிரியனை கோபாலனும் இறந்து விடுவதில் தடையிராது. ஆகை யால் நாங்கள் இருவரும் இறந்துபோக வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், உங்கள் இஷ்டம்போல் செய்யுங்கள். -

சாமிநாத சாஸ்திரி. நீங்கள் இருவரும் வருத்தத்தை அடையும்படி வாக்களித்துவிட்டேன் என்பதற்காகத் தானே நான் இறந்து போகவேண்டுமென்றேன்? நடந்த சங்கதிகளைச் சொல்லுகிறேன். என்மேல் தப்பு இருக் கிறதா இல்லையா என்று நீயே அறிந்துகொள். நேற்று ராத்திரி என்னைப் போலீஸ் ஸ்டேஷனில் அடைத்த கொஞ்ச நேரத்திற்குள் தாகத்துக்குச் சாப்பிட வெளியே விடவேண்டுமென்று கேட்டேன். வெளியே போகவிட வில்லை. அப்பால் அரைமணி நேரம் பொறுத்து எனக் குத் தண்ணிர் கொடுக்க வேண்டுமென்கிற எண்ணத் துடன் போலீசாரிடம் வீண்சண்டை போட்டால் தன்னை யும் அடைத்துவிடுவார்களென்றும், அப்போது எனக்குத் தண்ணிர் கொடுக்கலாமென்றும் எண்ணி அப்படியே சண்டை செய்து தான் ஜலம்கொண்டு உள் வந்ததாக ராமண்ணு சொன்னன். நான் கொஞ்சமாவது சந்தேகப் படாமல் வாஸ்தவமென்றே நினைத்தேன். அப்பால், இந்த ஊர் சப் மாஜிஸ்டிரேட் நீலமேக சாஸ்திரிகளின் தூண்டுதலின்பேரில்தான் என்னை அடைத்திருப்பதாகவும், உன்னை நீலமேக சாஸ்திரிகளுக்குக் கல்யாணம் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/63&oldid=677429" இலிருந்து மீள்விக்கப்பட்டது