பக்கம்:ராஜாம்பாள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

5

செஷன்ஸ் கோர்ட்டு 1.

துச் சகலமுஞ் சொல்லிவிட்டு நீலமேக சாஸ்திரிகளைக் கல்யாணஞ் செய்துகொள்வதாகவும் சொன்னுள்.

துரைசாமி ஐயங்கார் நடேச சாஸ்திரிகளே, தாங் கள் காஞ்சீபுரத்திற்கு ஜனவரிமீ 27 வ. காலை ஒன்பது மணி ரெயிலுக்கு முதல் வகுப்பு வண்டியில் வந்ததாக மாஜிஸ் டிரேட் கோர்ட்டில் சொன்னது ஞாபகமிருக்கிறதா?

நடேச சாஸ்திரி: மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் சொன் னது என்ன? இப்போதும் அப்படியே சொல்லுகிறேன்.

துரைசாமி ஐயங்கார்: உங்களுக்கும் ராஜாம்பா ளுக்கும் விரோதமென்றும் அவள் தங்கள் வீட்டிற்கு வருவதில்லையென்றும் சொன்னீர்களே! அப்படியிருக்க அன்று மாத்திரம் எப்படி வந்தாள்?

கடேச சாஸ்திரி ஒருகால் இனி விரோதம் வைக் “கக்கூடாதென்று வந்திருப்பாள்.

துரைசாமி ஐயங்கார் : அவள் வந்து போனது எவ ருக்கும் தெரியாதே? -

கடேச சாஸ்திரி: எவருக்குத் தெரியுமென்து எனக் குத் தெரியாது. - “.

துரைசாமி ஐயங்கார் : உமது வேலைக்காரர் கூட அப்போது அங்கே இல்லையோ? - - நடேச சாஸ்திரி: எல்லோரும் வேலையாய் அப்போது வெளியே போயிருந்ததால் வீட்டில் யாரும் இல்லை.

பிறகு 4-வது சாட்சி காவன்ன துரை கூப்பிடப்பட் -டார். -

பா. கொக்கு துரை : மிஸ்டர் காவன்ன ராஜாம் பாள் உடம்பில் எத்தனை காயங்கள் இருந்தன மரணம் என்ன காரணத்தால் சம்பவித்திருக்கும் ?

காவன்னு துரை : துப்பாக்கியின் குண்டு பாய்ந்த காயம் ஒன்று, கட்டாசியால் குத்தின காயமொன்று, ஆக இரண்டு காயங்கள் இருந்தன. அவள் இறப்பதற்குச் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு முன் விஷம் கொடுக்கப் பட்டிருக்க வேண்டுமென்றும் அபிப்பிராயப்படுகிருேம்.

பா. கொக்கு துரை: என்ன விஷம் என்று கண்டு பிடித்தீர்களா? - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/159&oldid=684701" இலிருந்து மீள்விக்கப்பட்டது