பக்கம்:ராஜாம்பாள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 இராஜாம்பாள்

பும் நான் உன்னை விரும்புவதைப்போல் விரும்பியிருக்கு மாட்டாள் என்பது சத்தியம். நான் இவ்வளவு சொன்ன பிற்பாடுகூட இன்னும் நீ வாக்களிக்காமல் இருப்பது மகா உசாதகமாகும்.

கோபாலன்: லோகசுந்தரி, முன்னலேயே நான் ராஜாம்பாளைத் தவிர வேறே யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேனென்று கண்டிப்பாய் உனக்குச் சொல்வியிருக்கிறேன். மேலும் உன்னை என் சொந்தத் தங்கையைப் போல் பாவிப்பதாகவுஞ் சொல்லியிருத் கிறேன். நீ மறுபடியும் என்ன இப்படி இம்சிப்பது எனக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கிறது. என்னைக் கல்யான்ைஞ் செய்துகொள்ள இஷ்டப்பட்டு வந்த பெண்ணைக் கொலை செய்தேனென்று கொடிய குற்றஞ் சாட்டப்பட்டு ஜெயிலில் அடைபட்டிருக்கும் எனக்கு நீ, காமாதி போகங்களின் இன்பங்களைப் போதிப்பதல்ை வரும் பயன் என்ன? மண வாள நாயுடு என் கழுத்துக்குச் சரியாய்ச் சாட்சியங்களை ஏற்படுத்தியிருக்கிருன். நான் தப் புவதே மகா துர்லபம். அப்படியெல்லாம் இருக்க, சதா என்னையே நினைத்துக் கொண்டிருப்பதாகவும் எனக்கு உன்மேல் பிரியம் இல்லாவிட்டால் என் உருவம் உனக்கு எப்படித் தோன்ற முடியுமென்றும் ஏதேதோ பேசுகிறாய் என் சொந்தத் தங்கை ஒருத்தி இருந்தால் அவள்மேல் எவ்வளவு பகடி மாயும் அன்பாயும் இருப்பேனே அவ்வளவு பகடிமாயும் அன்பாயும் உன்னிடம் இருக்க முடியுமே தவிர, வேறு விதமாக இருப்பது முடியாத காரியம். மேலும், ராஜாம்பாளைக் கொலை செய்த பாதகர்களைக் கண்டு பிடிக்கும் வரையில் வேறே சமாசாரங்களை யோசனை செய்ய என்னல் சாத்தியமாகாது. * .. .

லோகசுந்தரி: நீ என்னைக் கல்யாணஞ் செய்து, கொள்வதாக வாக்களித்தாய்ானல், இன்றுமுதல் மூன்று தினங்களுக்குள்ளாக ராஜாம்பாளைக் கொலை செய்த பாதகனைக் கண்டுபிடித்துச் சிறையில் அடைப்பதன்றி, உன்னையும் விடுதலை செய்யும்படி செய்கிறேன். அப்ப்டி நான் செய்யாவிட்டால் நீ என்னைக் கல்யாணஞ் செய்து கொள்ள வேண்டாம். , , , , . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/140&oldid=684682" இலிருந்து மீள்விக்கப்பட்டது