பக்கம்:புது வெளிச்சம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5

அந்ருதாத் சத்யமுபைமி



ன் அருமை நண்பனே! உன் வாய் திறந்து சொல். ‘அந்ருதாத் சத்ய முபைமி' என்று. ஓதி உணர்ந்து பிறர்க்கு உரைத்துத் தானும் அதற்கு தக அடங்கி ஒழுகாத ஒருவன் பேதையிலும் பேதை என்கிறார். நமது திருவள்ளுவர். திருவள்ளுவர் யாரென நீ தமிழனாய்ப் பிறந்தும், கலாசாலைக் கல்வி கற்றும் இன்னும் சரிவர அறிந்து கொள்ளவில்லை. மெய்யாகவே அவர்! தமிழர்தம் ஆத்மீக ஆசான். ஆகவே நான், 'அந்ருதாரத் சத்ய முபைமி' என உன்னைச் சொல்ல வேண்டுகிறேன். இந்த அருமைச்சூத்திரத்தின் பொருள் விளக்கிச் சொல்லுவதற்கு முன்பேயே ஒரு தடவை உன் வாய் உரைக்கட்டும் என்றுதான் வேண்டுகிறேன்.

புது வெளிச்சம்

ᗍ 17