பக்கம்:புது வெளிச்சம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான் பல ஆண்டுகளுக்குமுன், கன்னடம் கற்க விரும்பி அந்த நாட்டில் இரண்டு ஆண்டுகாலம் வசிக்க வேண்டி இருந்தது. தமிழ் நாட்டைக் காட்டிலும் புறநாகரீகத்தில் கன்னடமக்கள் பின்தங்கினவர்களாகவே எனக்குத் தென்பட்டனர். ஆயினும் பழகப் பழக அவர்கள் அக நாகரிகத்தில் ஒரளவு மேம்பட்டவர்கள் என்று என்னை எண்ணுமாறு நடைமுறை ஒழுக்கம் அவர்களிடம் இருப்பதை நான் கண்கூடாகக் கண்டேன்.

பெரும்பாலும் கல்வியே இல்லாத கிராமவாசிகள் கூட அகச்சுத்தமுள்ளவர்களாகவே இருந்தனர். இன்மை காரணமாய் அவர்களிடம் ஈகையைக் காணவில்லை எனினும், உள்ளங்களில் 'இரக்கம் இருப்பதைக் கண்டேன். சத்வம் பெருங்காயமிட்டிருந்த பானைபோல் முதலில் இருந்திருக்கலாம் என்பதும் தெரிந்தது. சத்யமே தருமம் என்பது அவர்கள் அறிந்துள்ளனர்.

ஒரு நாள், ஒரு வாலிபன் தன் வீட்டுத் திண்ணையில் குந்திக்கொண்டு தன் தாய்மொழியில் ஒரு பாட்டைப் பாடிக்கொண்டிருந்தான்.

சத்ய வேனன்ன தாயி தந்தே,
தத்ய வேநன்ன பந்து பழகவு;
சத்ய வாக்கிகே தப்பி நடதரே
மெச்ச னாதெவ் தீசனுக!
என்று.

அவன் குரலில் பண்ணமைந்திருக்கவில்லை; எனவே இனிமை இருக்கவில்லை தாளக் கட்டில்லை. ஆயினும் அந்தப் பாடலில் அறிவார்ந்த சத்தியமிருந்தது. அவனுடைய உள்ளம், அந்தச் சத்திய ஈடுபாட்டில் இரண்டற்று ஒன்றி வெளிப்பட்டும் கொண்டிருந்தது. இது நிற்க,

'சத்தியமே வெல்லும் என நாம் சொல்லிக்கொள்வதனால் மட்டும் எதையும் நாம் வென்று விட முடியாது. நம்முடைய உள்ளத்தில், உரையில், செயலில் அந்தப் பேருண்மை ஒன்றியிருந்த தெனில் வெற்றி நம்முடையதாகவே இருக்கும். தெய்வசக்திக்கு என்றும் தோல்வி இல்லை என்பது உலகில் பல ஞானிகள் மூலம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழர்களாகிய நாம்

புது வெளிச்சம்

ᗍ 25