பக்கம்:புது வெளிச்சம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படைத்துவிட்டே மாய்ந்து போகின்றன. இதுவே ‘புனர்சென்மம்' வழக்கமாகச் சொல்லப்படும் பொருள் முழுப் பொய்’ என்கிறார் ஆசிரியர்.

எங்கும் பரவலாகப் பேசப்படுகிற 'பிரார்த்தனை' பற்றிக் கூறும்போது, 'பிரார்த்தனை செய்து காரியம் சாதித்துக் கொள்வதற்கேற்ற உணர்வுடைய ஒரு தெய்வம் பிரபஞ்சத்தில் இருப்பதாக நினைப்பது ஒருவித பிரமை. அதாவது அறியாமை. உபநிசத்துக்கள் இந்த மாதிரியான ஒரு தெய்வமிருப்பதை ஒத்துக் கொள்வதில்லை', என்கிறார்.

பலப்பல சமயத் தொடர்களுக்கு மெய்விளக்கம் தருவதற்கு, ஏராளமான உபநிடதங்களையும், சமய சாத்திரங்களையும் தமிழ்நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு மேற்கோள் காட்டுகிறார். 'சோதிடம் சுதந்திர மக்களுக்கு மாட்டப்பட்ட விலங்கு' என்பது கவிஞரின் தெளிவான முடிவு.

கவிஞர் தமது கவிதைகளில் காட்டிய கோபம் இந்த ஆய்வு நூலிலும் புலப்படுகின்றது. பழைய பொய்மைச் சித்தாந்தங்களின்மீது தமது கனலை உமிழும் கவிஞர், அவற்றையெல்லாம் தூக்கிக் குப்பைக் கூடையில் வீசி எறியுங்கள் என்கிறார். அறிவியல் பார்வையும், விசாலமான சமய நூலறிவும், உண்மையை உரக்கச் சொல்லும் துணிவும், காலத்திற்கேற்ற சிந்தனையும் கொண்டு படைத்துள்ள இந்த ‘புது வெளிச்சம்' என்ற ஆய்வு நூல், நம் சிந்தைக் குழப்பத்தைத் தெளிவுபடுத்தும் அரிய படைப்பு.

‘கவியைக் கெடுத்தது காசுப் பாட்டு. செவியைக் கெடுத்தது சினிமாப் பாட்டு. புவியைக் கெடுத்தது புரோகிதன் பாட்டு’ என்ற கவிஞரின் சாட்டையடி போலவே சூடாக இருக்கிறது நூல்.

புது வெளிச்சம்

v

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_வெளிச்சம்.pdf/7&oldid=1395785" இலிருந்து மீள்விக்கப்பட்டது