பக்கம்:புது வெளிச்சம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3

உத்கீதம்


த்கீதம்" என்ற சொல்லும் சாரமுள்ள ஒரு அருமையான பொருள் பொதிந்த சொல்தான். எனவே நீ இதனை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். உன்னை நீ உயர்த்திக் கொள்ள விரும்பினால், அதற்கு வேண்டிய உணர்வுகள் உன்னிடம் இருந்தே தீர வேண்டுமல்லவா?

"ஒமித் ஏதத் அட்சரம் உத்கீதம் உபாசித” என்கிறது இந்த உபநிசத்து.

'ஓம்' என்னும் இது ஒரு அட்சரம் தான், எனினும் அது உத்கீதம் என்ற பெயரும் பெற்றுள்ளது. எனவே அதை நீ (உன் உயிரைக்காட்டிலும்) உயர்ந்ததென எண்ணி உபாசிக்க வேண்டும், என்பது இதன் பொருள். உபாசித்தல் என்றால் போற்றுதல்தான். வேறு அஞ்சத்தக்கதோ அனுசரிக்க இயலாத பொருளோ இதில் இல்லை.

புது வெளிச்சம்

ᗍ 9