பக்கம்:புது வெளிச்சம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

ரிதம்

மிழ் இலக்கணத்திற்கு முரணாய் மொழிக்கு முதலெழுத்தாக வரக் கூடாது' என ஒதுக்கப்பட்ட உயிர்மெய் எழுத்தையே முதலெழுத்தாகக் கொண்டு, ரிதம் என வழங்கும் இச்சிறிய சொல் ஒரு மகத்தான சொல். சிறு மீன் சினையினும் சிறிய ஆலமரத்தின் வித்தினை இச்சொல் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டுள்ள விழுமிய கருத்தை முழுமையாக அறிந்து கொள்வது சிரமத்தின்பால் பட்டது. ஆயினும், இதை உலகத்திற்கு விளக்கித்திர வேண்டிய கடமை காரணமாக எழுதி முடிக்க விரும்புகிறேன். இது அவசியத்தை முன்னிட்ட செயலே அன்றி அறிவு மேன்பட்டதன்று எனத் தன்னடக்கத்துடன் சொல்லிக்கொள்கிறேன்.

12 ᗛ

கவிஞர் வெள்ளியங்காட்டான்