பக்கம்:புது வெளிச்சம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவிர்க்காது; துன்புறுத்தவும் உடனே அவர்கள் துணிந்து விடுவர். சாக்ரட்டீசுக்கு விசம் கொடுத்துக் கொன்றது இதற்கு ஆதாரம். ஆப்ரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, இந்திரா காந்தி எத்தனை ஆதாரங்கள் வேண்டுமெனினும் கைவசம் உண்டு.

எனவே தான் இத்தகையவர்களால், 'உற்ற நோய் நோய் நோன்றல் உயிர்க் குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு’, என்று வள்ளுவர் தம் முதற்குறளிலேயே நம்மை எச்சரித்து விடுகிறார்.

திருக்குறளை, ஆதர்சநூலாகப் பெற்ற நாம் அதைப் புரிந்தொழுகாதது தவறு: ஆமாம் இந்தப் பெருந்தவறை இனிமேலாவது செய்யாது நம்மை நாமறிந்து; தெய்வ நிலையறிந்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் ஒருவனாக வைத்துப் போற்றுமாறு நம் ஒழுக்கத்தை மாற்றியமைத்துக் கொள்ளத் துணிந்து தொடங்குவோமாக!

ஒம் சத்யமேவ ஜயதே!

❖ நியாயத்தை விட்டு விட்டு நியாயம் பேசும் நாய்க்கு நரகம்
  கிட்டாமல் போகுமா?
- கனகதாசன்

❖ எட்டிக்கனி வனப்பாய் இருக்கலாம். வட்டிக் கடைக்காரனும்
  வனப்பாய் இருக்கலாம், அதனிடம் இனிப்பிருக்காது.
  இவனிடம் இரக்கம் இருக்காது.
-வெ

❖ நாம் தெய்வமாக மாற விரும்புவதற்கு முன் மனிதனாக
  வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
- ப.வா. வனமாலி

30 <

கவிஞர் வெள்ளியங்காட்டான்