பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

31


ஏரோ
மீனம்பாக்கம்,
பல்லாவரம் ரோடு.
23.10.39

நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்கள் அருமைக் கடிதம், கட்டுரை, படங்கள் முதலானவைகளும் வந்து சேர்ந்தன. கல்கியிடம் கட்டுரையையும் படங்களையும் கொடுத்துத் தீபாவளி மலரில் வெளிவந்தால் நன்றாயிருக்கும் என்று சொன்னேன். அது விஷயமாகத் தங்களுக்கு ஆ.வி. ஆபிசிலிருந்து குறிப்பு வந்திருக்கும் என்று நம்புகிறேன். படங்களுக்கு அடிக்குறிப்பு அவசியந்தானே. கூடிய சீக்கிரம் குறிப்பு எழுதி அனுப்பினால் நல்லது. மைசூர் கிருஷ்ணன் படம் ரொம்ப நன்றாய்த்தான் இருக்கிறது. அது நேராக எடுத்தப் படமாக இல்லாததால் மலரில் பிரசுரிக்கமாட்டார்கள். அப்படியே தான் மொழிபெயர்ப்புச் செய்யுள்களைப் பொதுவாய் பிரசுரிப்பதில்லை. தங்கள் மொழிபெயர்ப்பு, விஷயத்தைத் தெளிவாய் விளக்குகிறது. ஆனால் தமிழ்ப் பண்பை வெளிப்படுத்துகிறதைப் பார்க்கிலும் ஆங்கிலப் பண்பைத்தான் வெளிப்படுத்துகிறது. தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் பாடல்களிலும் சில அப்படிப்பட்டனவாகவே உள்ளன. அது காரணமாகவே நேயர்களை நோக்கி எச்சரித்து எழுதும்படி நேருகிறது. இது தங்களுக்கு ஞாபகமிருக்கலாம். எப்பொழுதும் இந்த விஷயத்தை நாம் எல்லாரும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு இலக்கிய விஷயத்தில் பிரவேசித்தால் நல்லது. பாரதியார் கூட சில வேளைகளில் மறந்து போனதின் காரணமாக கவியை விட்டு செய்யுள் யாத்தலில் இறங்கிவிடுகிறார். மேலும் ஆங்கிலக் கவிகள் பலரும் வசனத்தில் எழுத வேண்டியவைகளை செய்யுள் வடிவத்தில் எழுதி வைத்துக்கொள்ளுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். மேல்நாட்டு பிரபல