பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

151


திருக்குற்றாலம்

தென்காசி

19.10.53

அன்பான பாஸ்கரன் அவர்களுக்கு,

கம்பர் தரும் ராமாயண அரங்கேற்றம் அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆரம்பமாகிறது என்ற முடிவு தெரிந்திருக்கும். ராஜாஜி 3 ஆம் தேதி காலையே வந்து விடுகிறார்கள். மறுநாள் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் புறப்படுகிறார்கள்.

உங்களுக்கு அழைப்பு வந்திருக்கும் உங்களையும் பேசக் குறிப்பிட்டிருக்கிறது. பேசுகிறவர்கள் எல்லாரும் கம்பரை மதிக்கிறவர்கள். கம்பருக்கு யோக தசைதான். சடையப்ப வள்ளல்களாக அணிவகுத்து நிற்கிறார்கள். கோவிந்தசாமி மூப்பனார், கே.வி.எல்.எம். ராம், குழந்தையின் செட்டியார் எல்லாரும் துணையாய் நிற்கிறார்கள்.

அவர்களுடைய வள்ளன்மைக்குத் தக்கபடியாக உயர்ந்த பதிப்பாகவே இருக்கிறது புத்தகம். இவ்வளவு அழகாகத் தமிழ்ப் புத்தகம் வெளிவந்தததில்லை என்று சொல்லுகிறார்கள். எல்லாம் கடவுள் அருள்தான்.

ஏதோ வட்டத்தொட்டி என்று ஆரம்பித்தோம். கம்பர் தரும் ராமாயணம் என்ற பூர்த்தியாகி இருக்கிறது. கல்கியால்தான் எல்லாம் நிறைவேறி இருக்கிறது. கல்கி ஆசிரியர் கொடுத்த நிலையான ஆதரவை அளவிட்டு சொல்ல முடியாது. வேறெந்தப் பத்திரிகையும் போடாது. போட்டாலும் நாலு இதழோடு சமாப்தி ஆய்விடும்.

கல்கி இடம் பண்ணி வைத்தார்கள் கம்பர் கம்பீரமாய்க் கொலு வீற்றிருக்கிறார். நாம் எவ்வளவோ திருப்திப்பட வேண்டிய காரியம்.