பக்கம்:புது வெளிச்சம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேலும், 'சார்புகள்' என்பன நல்லன தீயன என இருவேறு வகையில் உள்ளன. நல்லனவான சார்புகள். ஈவு, இரக்கம், பரிவு, பங்கு அடக்கம், ஒழுக்கம் உண்மை பேசுதல் போன்றன. கைக் கொண்டு மாறானவற்றை ஒதுக்கிவிட்டு, நாம் மேற்கொண்ட தொழிலைச் செவ்வனே செய்து கொண்டிருப்பது தான் தவம், அல்லது நோற்றல் என்னும் பதப்பொருள். ஆனால் உண்மையை நாம் புறக்கணித்துப் புராணப்புளுகுகளை நம்பினோம்; அருச்சுனன் சிவனை நோக்கித் தவம் செய்து பசுபதாஸ்திரம் பெற்றான். இராவணன் சிவனை நோக்கித் தவஞ்செய்து ஒன்றரைக்கோடி ஆண்டு ஆயுளைப் பெற்றான் என்பன போன்ற பொய்களால் நாம் முறைதவிர்க்கப்பட்டோம். நமக்குப் புறம்பாகத் தெய்வம் உள்ளது. என்று உபதேசிக்கப்பட்டோம். 'தத்துவம் அசி' எனும் சூத்திரம் அதுநீயாக உள்ளனை, என்று சொல்லியிருந்தும் அதை மறைத்து நமக்குப் பொய் உபதேசம் செய்து அதோகதிக்கு உள்ளாக்கி உள்ளனர். நமது முன்னோர் இதை நாம் அறியாதுள்ளோம்.

இதை நிரூபிக்கக் இன்னும் ஒரே ஒரு விபரம் மட்டும் இங்கு கூற விரும்புகிறேன். உன் உள்ளத்தில் இன்னும் மீதி மிச்சங்களாக இருக்கும் ஐயங்களை அந்த எடுத்துக்காட்டு நிச்சயமாக அகற்றிவிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது ஒரு அற்புதமான சூத்திரம், மறுக்க முடியாத, படிக்கும் ஒவ்வொரு புலவனும் ஒத்துக்கொண்டே தீரவேண்டிய சூத்திரம்; திட்டநுட்பமாகப் பொருளையும் விளக்குகிறது.

'நாஸ்தி சத்யா சமன் தப' என்பது தான் அது. இதன் பொருள், சத்தியத்தற்குச் சமமெனச் சொல்லத்தக்க தவம் வேறெதுவொன்றும் இல்லை, என்பதுதான் நாம் சத்தியத்தை இதயத்தில் நழுவி விழாது பதித்துக் கொண்டோமாயின், அது காட்டும் அறவழி ஒழுக்கத்திலிருந்து இம்மியளவும் வழுவாது நம்மை அது நடத்திச் செல்லும். அப்போது இதுகாறும் நம்மோடொட்டி உறவாடி நண்பர்களாகி வாழ்கின்ற மற்றவர்களுடைய எண்ணம், சொல் செயல்களுக்கு மாறுபடுகிறோம். நம்மை அவர்கள் பகைக்கிறார்கள். அதிலும் கொஞ்சம் காசுத்தாசர்களின் கண்கள் சிவப்பேறவும்

புது வெளிச்சம்

29