பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

ரசிகமணி டிகேசி




திருக்குற்றாலம்
தென்காசி
12.12.48

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

கடிதங்கள், அன்பான கடிதங்கள் கிடைத்தன. இங்கே வந்ததும் ஜோலி அதிகமாய்ப் போய்விட்டது. உடனே பதில் எழுத முடியவில்லை. பலராம்தானே எழுதுகிறாரே என்று மெத்தனமாய் இருந்துவிட்டேன்.

குற்றாலத்தை விட்டுப் புறப்படும்போதே எப்படியாவது வேலூருக்குப் போய்விட வேண்டும் என்று பலராமிடம் சொன்னேன். 20 ஆம் தேதி வேலூர் வந்து திரும்பலாம் என்று எண்ணுகிறேன். ராஜேஸ்வரியும் அப்போது வந்துவிடுவாள். அவள் செளக்கியமாய் காரைக்குடியில் குடும்பப் பிரதானியாய் விளங்குகிறாள். ரொம்ப சந்தோஷம். தேவகோட்டை தமிழிசை ஆண்டுவிழாவில் பேசி இருக்கிறாள். நன்றாய்த் தெளிவாய்ப் பேசியிருப்பாள். சந்தேகம் என்ன? சந்தேகம் என்ன. “Have Some thing, how will know how to say it" என்று சாக்ரடீஸ் சொன்ன உண்மையை அவளிடம் தெளிவாய்ப் பார்க்கிறோம்.

பொதுவாக நாம் பேச்சில் என்னத்தைப் பார்க்கிறோம். காகிதத்தைத் தும்புதும்பாகக் கிழித்துக் காற்றில் பறக்க விடுகிற மாதிரி வார்த்தைகளைப் பறக்க விடுகிற காரியமாகத்தானே இருக்கிறது பேச்சு. 20 ஆம் தேதி அவளும் வந்துவிடுகிறாள். மிக்க சந்தோஷம். அம்மைக்கு வேலூர் பிடித்திருக்கும். மகளும் வந்துவிட்டால் முற்றிலும் சரியாகப் போய்விடும். இங்கே ஒரே பாட்டுத்தான். இடையிடையே நடனம். ஆக தேவலோகந்தான். உடம்பும் அதனால் தேறி இருக்கிறது. காலிலுள்ள புண்தான் கொஞ்சம் ஏதோ மழை விட்டும் தூவானம் தீரவில்லை என்பது போலே ஒரு சிறு