பக்கம்:புது வெளிச்சம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1


ஓம் தத் சத்


லகில், வாழப்பிறந்த மனிதன் இளமையிலேயே கற்பன கற்று, அறிவன அறிந்து வயது வந்ததும் நுகர்வன நுகர ஒத்த இயல்பினை யுடைய ஒருத்தியை மணந்து இல்லற வாழ்வைத் தொடங்குதல் தவிர்க்க இயலாதது. கூடவே தான் இனிச் சாதித்துத் தீரவேண்டிய குறிக்கோள் ஒன்றையும் அவசியம் தன் உளத்தில் ஓர்ந்து தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தி வைத்தொழுகுதலும் தவிர்க்க இயலாததே.

"குறிக்கோளில்லாத வாழ்வு பண்டமில்லாத பாத்திரம், அல்லது பயன்படுத்தப்படாத பாத்திரத்திலிட்ட பண்டம் போன்றதே என்பர் அறிஞர், ஏயால துரைசாமி என்னும் கன்னடக் கவிஞர். ஓர் இலந்தை மரத்தின்

புது வெளிச்சம்

ᗍ 1