பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

59


வந்து கலந்துகொள்ள நேர்ந்தது. நாம் எலலாரும் பேசிய பேச்சை சபையோர் ரொம்ப நன்றாய் அனுபவித்தார்கள். நேற்று நடந்த விஷயங்கள் எளிதில் அவர்களது இதயத்தை விட்டுப் போய்விடாது. சங்கம் தழைத் தோங்குவதற்கு வேறென்ன வேண்டும். வினைத்திட்பம் என்பது ஒருவர் மனத்திட்பந்தானே.

தங்கள் அன்பை எல்லாம் செலுத்தி, சங்கரன்கோயில் வாசிகளுக்கு என்னை அறிமுகப்படுத்திவிட்டீர்கள். நேற்று தாங்கள் பேசும்போது அவர்கள் என்னை இந்த உலகத்து ஆசாமி என்றுகூடக் கருதியிருக்கமாட்டார்கள் (நானே கருதவில்லையே). இந்த அறிமுகத்துக்குப் பிறகு என்னுடைய சொல் எங்கே ஏறப் போகிறது அவர்களுக்கு என்றுகூடச் சந்தோஷப்பட்டேன். ஆனாலும் எப்படியோ அவர்கள் எல்லாவற்றையும் மறந்து நான் பேச ஆரம்பித்ததும் அவர்களைச் சேர்ந்தவன்தான் நானும் என்று எண்ண ஆரம்பித்து விட்டார்கள். நான் சொன்னதை அறிந்துவிட்டார்கள். அனுபவித்தும் விட்டார்கள். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தமிழ் ஆர்வத்துக்கு எப்படியோ சிமெண்ட் கான்கிரீட் அஸ்திவாரம் போட்டாயிற்று. நமக்கு இனி கவலை இல்லை.

தாங்களும் அம்மாளும் செய்த விருந்தோம்பலை மறக்க முடியாது. ஸ்ரீனிவாசராகவன், கணேசன் மூவரும் அனுபவித்தார்கள். நானும் வி.பி.எஸ் அவர்களுமோ உடல்நலம் பெற்றோம். 7.5.42 ஆம் தேதியை அரியதொரு நாளாகத் தினக் குறிப்பில் பதிந்துகொள்ள வேண்டியதுதான். இந்த மாதிரி பத்து நாட்கள் ஒருவருக்கு ஒரு வருஷத்தில் கிடைக்குமானால் பெரிய லாபந்தான். வாழ்க்கைக்குள் ரசம் புகுந்துவிடும். தம்பி சிதம்பரம் குழந்தைகள் எல்லோரும் விருந்தோம்பலில் பங்கெடுத்துக் கொண்டது அலங்காரமாய் இருந்தது. நல்ல பயிற்சிதான் அவர்களுக்கு நெருக்கடியான வேலைக்குள் தாங்கள் கண்ணுங்கருத்துமாய் விருந்