பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

51

லிங்கமும் பெரிய லிங்கம்தான். பெருவுடையார் அல்லது பிருஹதீசுவரர் என்பது அவர் பெயர். கர்ப்பக் கிருகத்திற்கு மேலே பிரம்மாண்டமான கோபுரம். மேருமலை போன்ற தஷிணமேரு அது. அதன் விமானத்தின் உச்சியில் சதுரவடிவமான பிரம்மரந்திரத் தளக்கல், பொற்கலசம், பொன் போர்த்த ஸ்தூபி எல்லாம் உண்டு. பிரம்மரந்திரத் தளக்கல் ஒரே கருங்கல், இருபத்தைந்து கன அடி, எண்பது டன் நிறையுள்ளது. அதை அந்தக் கோயில் கட்டிய இடத்திலிருந்து நாலு மைலுக்கு அப்பாலுள்ள சாரப்பள்ளம் என்ற கிராமத்திலிருந்தே சாரம் போட்டு இச்சிகரத்தில் ஏற்றினார்களாம். இந்தப் பெரியகோயில் இன்று இருப்பது தஞ்சை நகரிலே, இதை அன்று கட்டினான் ராஜராஜன் என்னும் சோழ மன்னன். சோழ அரசர்கள் ஏன் தமிழ்நாட்டு மூவேந்தர் எல்லோரும் எடுப்பித்த கோயில்களில் எல்லாம் தலை சிறந்து விளங்குவது இந்தத் தஞ்சைப் பெரிய கோயில்தான். ராஜராஜன் கி.பி. 985 முதல் இருபத்தொன்பது ஆண்டு சோழ சாம்ராஜ்யத்தைப் பரிபாலித்திருக்கிறான். ராஜராஜன் கட்டிய கலைக்கோயில் இன்று ராஜராஜேசுவரம் என்று வழங்கப்டுகிறது.. ஆம், அது தமிழரின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்ட அமைந்த ஒரு கலைக்கோயில்தான்.

கலை என்றால் என்ன?

கடவுள் என்றால் யார்? என்று கேட்டால்கூட எளிதாகச் சுட்டிக்காட்டிவிடலாம் போலிருக்கிறது. கலை என்றால் என்ன? என்று சொல்வது மட்டும் முடிகிற காரியமாக இல்லை. கலைகளைப் பற்றி மேல்நாட்டார் எழுதிய புத்தகங்களையெல்லாம் புரட்டலாம். ரஸ்கின், தாகூர், ஹாவெல், ஆனந்த குமாரசாமி முதலிய அறிஞர்கள், கலா ரசிகர்கள் எழுதியதையெல்லாம் படித்துப் படித்துப் பார்த்தாலும் கலை என்றால் என்ன என்ற கேள்விக்குச் சரியான சுருக்கமான ஒரு விடை கிடைப்பது என்னவோ சாத்தியமில்லைதான்.