பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

49

மில்டனது தோள் மேலேயே அல்லவா ஏறிக் கொண்டு நிற்கிறான். (Our kamban stands over the shoulder of your Miltan) என்று நான் சொன்னவுடன் அந்த அம்மாள் புன்னகையுடனேயே என்னுடைய திருத்தத்தைக் கூட அங்கீகரிக்கத்தான் செய்தாள்.

மில்டனுக்கு உலக கவிகளிடையே கிடைத்திருக்கும் ஸ்தானம் தெரியும். அந்த மில்டனையே முதுகுக்கு மண் காட்டி விடுகிறான் கம்பன். பின் கேட்பானேன். கவி உலகில் கம்பன் ஸ்தானம் என்ன என்று இதையெல்லாம் தெரிந்துதானே சொன்னார் வ.வே.சு ஐயர், கவிதாலோகத்தின் பேரரசர்கள் என்று சொல்லத் தகுந்தவர்கள் எல்லாம் கவிச் சக்கரவர்த்தி கம்பன் சந்நிதியிலே முடி சாய்த்துத் தலைவணங்க வேண்டியதுதான் என்று.

❖❖❖