பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

கம்பன் சுயசரிதம்

இருக்கிறது. கம்பன் பிறந்த ஊரைக் காண சும்மா ரயிலில் இருந்து இறங்கிவிட்டால் மட்டும் போதாது. காலில் தெம்பு உள்ளவர்கள் எல்லாம் நடக்கத் தயாராக வேணும். இல்லை கொம்பில்லாத மொட்ட மாடுகள் பூட்டிய வண்டிகளில் ஏறி ஊர் சென்று சேர வேண்டும்.

ஊர் செல்லுமுன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வடக்கே ஓடும் காவிரி நதியிலே இறங்கி குளித்துக் கொள்ளலாம். இதைத் தவற விட்டவர்கள் ஊரை அடுத்துள்ள ஒரு குளத்தில்தான் குளிக்க வேண்டும். ஆனால் குளமும் நமக்கு வேண்டாம் என்பவர்கள் கூட கிணற்றில் குளித்துக் கொள்வதில் அதிக வேலை இல்லை. வேதங்களும் விரைந்தவர்களும் அஷ்டதிக்குப் பாலகர்களும் பூஜித்த இடம். அந்த வேதபுரி ஈஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடிய தேவாரம் உரை

தொழுமாறு வல்லார் துயர்தீர நினைந்து
எழுமாறு வல்லார் இசைபாட விம்மி
அழுமாறு வல்லார் அழுந்தை மறையோர்
வழிபாடுசெய் மாமட மன்னினையே.,

என்ற அழகான பாடலைப் பாடிக்கொண்டே கோயிலை வலம் வரலாம். அம்பிகை சௌந்தரவல்லியையும் கண்டு தொழலாம். ஆனால் இந்தக் கோயிலை விட்டு வெளிவரும் போது இதுக்கு ஏதோ ஏழைப் பங்காளன் கோயில் என்ற எண்ணத்தோடேதான் வெளியே வருவோம். பணத்தில் மட்டுமல்ல, ஏழ்மை; சிற்பச் செல்வத்திலுமே ஏழ்மையானதுதான்.

ஆனால் இந்தக் கோயிலை விட்டு வந்து சந்நிதித் தெருவில் கண்ணை முடிக்கொண்டு நேரே நடந்தாலும் நம்மை பெருமாள் கோயில் வாசலில் கொண்டு வந்துவிட்டுவிடும். ஆனால் கோயில் இடத்திலே வருவதற்கு முன் கண்கள் திறந்து புஷ்பகரணியையும் சுற்றிக் கொண்டு வந்தால்