பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

113


திண்டிவனத்துக்கு வேண்டுமென்று அக்காலத்தில் ரயிலைக் கொண்டுவிடுகிறார்கள் என்று தோன்றுகிறது. ரயில்காரனை வையவே தோன்றுகிறது. -

கங்கா நதிப் பக்கமாக ஓடிக்கொண்டு, தாகத்துக்குத் தண்ணீர் இல்லையே என்று நா வறட்சி எடுத்தவனும் உண்டுதானே. கம்பரது ஆனந்த கங்கை பக்கத்திலேயே பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்க மண்ணை வாரி வாரி வாயில் போட்டுக்கொண்டு தாகம் எப்படித் தீருகிறது என்று சொல்லுகிறவர்களுடைய காரியமும் திண்டிவனத்து காரியந்தான். திண்டிவனம் போதும்.

நண்பர் திருவிளங்கத்தின் பேச்சுக்கு ரொம்ப வியாபகம் உண்டாய்விட்டது. குழந்தை மாதிரி பேசிவிட்டார். கடல் கடந்து போனால் தான் புத்திசாலிகளைப் படிக்கலாமோ என்று சோமு எழுதுகிறான்.

பெங்களுரிலிருந்து ஏ.எஸ்.ஆர். சாரி அவர்களும் மிக்க உற்சாகமாக எழுதுகிறார்கள். அகஸ்மாத்தாய் தினகரனைப் பார்த்து விட்டுத்தான் தினகரன் பிரதியை எனக்கே அனுப்பியிருக்கிறார்கள். தினகரன் இங்கே எப்படி தொம்சம் செய்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரியாமல்,

எப்படியோ அன்பும் அன்பர்களும் மலிவான சரக்குகளாய் இருக்கின்றன. 9 ஆம் தேதி அன்று திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் திருநெல்வேலிக்குப் புறப்படுகிறேன் பலராமுடன்.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

❖❖❖