பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

159

வருகிறார்கள். இவர்களை அனுமான் சந்தித்து அளவளாவ அவர்களைத் தன் தலைவனான சுக்ரீவனிடம் அழைத்து வருகிறான். இவர்கள் தூரத்தே வருவதைக் காண்கிறான் சுக்ரீவன். தூரத்திலே வருகிற போது யாரோ இரண்டு அழகர்கள் வருகிறார்கள் என்று தான் தோன்றுகிறது. சுக்ரீவனுக்கு இரண்டு மரகத மலைகள், அம்மலைகள் மேல் சந்திர உதயம் தோன்றியது போல இரண்டு சௌந்தர்யமான முகங்கள் என்றே உணர்கிறான். இதனைப் பாடுகிறான் கம்பன் Long distance shot ஆக.

கண்டனன் என்ப மன்னோ
     கதிர்வன் இருவர் காமக்
குண்டலம் துறந்து கோலவதனமும்
     குளிர்க்கும் கண்ணும்
புண்டரீகங்கள் பூத்துப்
     புயல் தழீஇப் பொலிந்த திங்கள்
மண்டலம் உதயம் செய்த
     மரகதக் கிரியனுக்கே

ராமனும் இலக்குவனும் நெருங்கி வருகிறார்கள். சுக்ரீவன் அவர்களை கொஞ்சம் நெருக்கத்திலேயே பார்க்கிறான். அவர்கள் கைகளில் வில்லேந்தியிருக்கிறார்கள். பரந்த மார்பும் உயர்ந்த தோள்களும் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆம் இவர்கள் வெறும் அழகர்கள் மாத்திரம் அல்ல சிறந்த வீரர்களும் கூட என்பதை நோக்கிலேயே தெரிந்து கொள்கிறான் சுக்ரீவன். ஆம் இது ஒரு Closeup காட்சி.

நோக்கினான் நெடித நின்றான்
     நொடி வரும் கமலத்து அண்ணல்
ஆக்கிய உலகம் எல்லாம்
     அன்று தொட்டு இன்று காறும்