பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

கம்பன் சுயசரிதம்

என்ற பாடலை இரண்டு மூன்று தடவைப் பாடித்தான் பாருங்களேன். வில்லின் மணியோசை கேட்கும் உங்கள் காதில் ‘கணகண’ என்று. வில்லேந்திய வீரனாம் ராமனை இப்படி இலங்கைப் போர்க்களத்திலே காட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.

ராமனது வீரம் எத்தகையது எனறு தெரியப் போாக்களத்திற்கே போகவேண்டாம். அயோத்தியிலே அரண்மனையிலேயே இருக்கட்டுமே, அங்குமே அவன் வீரனாகத்தான் வாழ்கிறான். அந்த இளவயதிலே அவனை விரும்பிக் கேட்டுப் பெறுகின்றார் விஸ்வாமித்திரர் தன் வேள்வி காக்க அவருடன் புறப்படுகிறான் தம்பி இலக்குவன் உடன்வர.

வென்றிவாள் புடை விசித்து
   மெய்ம்மைபோல்
என்றும் தேய்வுறாத் தூணி
   யாத்து, இரு
குன்றம்போல் உயர்
   தோளில் கொற்றவில்
ஒன்று தாங்கி

அவன் புறப்படுவதைச் சொல்கிற கம்பன் அப்படியே ஒரு வீரனை, இளைஞனான வீரனைத்தான் நம் கண் முன் கொணர்கிறான். விஸ்வாமித்திரர் வேள்வி காக்கிற நேரத்திலேயே அவன் முதற்போர் ஆரம்பித்து விடுகிறது. அந்தக் கன்னிப் போரில் காகுத்தனுக்கே வெற்றி. அதில் ராமனுக்கு மட்டும் ஒரு குறை. முதற்போரில் தன் எதிராளி ஒரு பெண்ணாய் அமைந்துவிட்டாளே என்று. தாடகை என்பவளையும் பெண்களின் வரிசையிலா சேர்ப்பது? பெண்ணுருவில் வந்த பெரும்பூதம் ஆயிற்றே. ஆதலால் குரு ‘கொல்’ என்ற உடனே வில்லை வளைக்கிறான். தாடகையின் சூலம் இற்று விழுகிறது. அவள் உடலில் சுடுசரம் பாய்ந்து வெளிவருகிறது. அவளும் விழுந்து மடிகிறாள். இப்படி ராமன் முதற்போரிலே வெற்றிபெற்றதை, பார்த்தவர்களிடம் எல்லாம்