பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

17

இடத்தைத் தேடி அமர்ந்து கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

“அழாதே அம்மா!” என்று தன் தாயின் கண்ணீரை கைகளால் துடைத்த அருணகிரி, “நம்ம விமானம் எப்போ வரும் அம்மா?” என்று கேட்டான்.

“இன்னும் ஏழு நிமிஷத்தில்; நான்கு இருபத்தி ஐந்திற்கு வருமென்று விளக்கு போட்டிருக்கிறார்களே,” என்று வள்ளியம்மை ஒரு அறிவிப்பைச் சுட்டிக் காட்டினாள்.

அப்போது அவனுக்கு, தன் தந்தையின் நினைவு வந்தது அருணகிரி வீட்டு முற்றத்தில் ஒரு கயிற்றுக் கட்டில் போடப்பட்டிருக்கும் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு அருணகிரி அதில் தன் தந்தையோடு அமர்ந்திருப்பான், அப்போதெல்லாம் அவனது தந்தை அவனை அணைத்தபடி எதிர்கால ஈழத்தைப் பற்றிப் பேசுவார். இலங்கையின் தமிழரின் நிலை பற்றிப் பேசுவார் தன் தாயைப்பற்றிப் பேசுவார், சில சமயம் தன்னைத்தானே மிகவும் நொந்து கொண்டு, “அருணா உன் அம்மா பெரிய பணக்காரர் வீட்டிலே பிறந்ததவள்; என்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டதினால்தான் இப்படி கஷ்டப்படுகிறாள்.

‘ஒருவன் நாட்டுக்காக உழைக்க முன் வந்து விட்டால், பின் தன் சொந்த சுக துக்கங்களைப்