பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



62

தென்னைமரத் தீவினிலே...

போடணும்- பதிலுக்கு அதுவும், ஒண்ணை எடுத்து என் வாயிலே போடும் போது கையை...

வழியெல்லாம் வள்ளியம்மையின் மனம் தன் அன்புக் கணவனைப் பற்றியே சுற்றி சுற்றி எண்ணிய வண்ணமிருந்தது. செல்லச் சீமாட்டியாக வாழ வேண்டிய வள்ளியம்மை, பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக, ஏழை கனக விஜயனை விரும்பி மணந்து கொண்டாள். அதனாலேயே குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாகி, அவளுக்கு இந்த ஏழ்மை நிலை ஏற்பட்டது.

அதனால் என்ன- இப்போதும் அவர்கள் வரையில் கண்ணியமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிறரிடம் சென்று ஒரு வெள்ளிக் காசுக்காகக் கை நீட்டியது கிடையாது கணவன் எவ்வளவு சம்பாதித்துக் கொண்டு வந்தாலும், அதையே பெரிதாக ஏற்று ஒரு குறையும் இல்லாமல் சிக்கனமாகக் குடும்பம் நடத்தி; கணவன், மனைவி, குழந்தையோடு சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் கண்களுக்கு ஏழையாகத் தோன்றினால் இருந்து விட்டுப் போகட்டுமே என்பது அவள் எண்ணம்.

ஆனால் இவளைப் போல், வள்ளியம்மையின் பெற்றோரால் நிம்மதியாக இருக்க முடியவில்லையே!

வள்ளியம்மையின் தாயார் ஞானம்பாளுக்கும் தனியாக ஆஸ்தி இருக்கிறது; அதுபோல தந்தைக்