பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தென்னைமரத் தீவினிலே...

இருந்தார். அருணகிரிக்கு அங்கு நடப்பது எல்லாமே அதிசயமாக இருந்தது.

“இவர்கள் எல்லோரும், தினமும் இப்படித்தான் சாப்பிடுவார்களா; அல்லது, ஒரு புது விருந்தாளி வந்திருப்பதற்காக, விசேஷ சமையலா?” என்று அவன் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. ‘அதைப் பற்றிச் சாவகாசமாக தங்கமணி தனியாக இருக்கும் போது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று தன் ஆர்வத்தை உள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டான்.

பொன்னம்பலம் அடிக்கடி அருனாகிரியின் பக்கம் திரும்பி “அருணகிரி; சங்கோசப்படாமல் வேண்டியதையெல்லாம் கேட்டு வாங்கிச் சாப்பிடு; இதுவும் உன் வீடு தான்;” என்று உபசரித்தார். அதே சமயம் சமையற்காரரைப் பார்த்து, “பிள்ளை கூச்சப்படுவான்; அவனை நன்றாகப் பார்தது பரிமாறுங்கள்” என்று ஒரு உத்திரவு போலக் கூறினார்.

அவர்களை எல்லாம் பொறுப்போடு வெளியே அழைத்துப் போய்க் கூட்டி வந்த கனகசபையுடன் அவர்கள் வாங்கின சாமான்களையெல்லாம் குறித்துக் கொண்டு மீதி பணத்தை அணருகிரி கணக்கு பார்த்து தன்னிடம் ஒப்புவித்ததையும்; அதை நீயே வைத்துக்கொள் என்றதற்கு, “அது சரியான பழக்கம் அல்ல” என்கிற பெரிய வார்த்தை கூறி கணக்குப்படி பணத்தை திருப்பிக்கொடுத்து விட்ட