பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

33

போட்டுடாதே. உன் அம்மா, அப்பா எல்லாரும் சவுக்கியமா இருக்காங்க இல்லியா?” என்றார்.

“ஓ! விமான நிலையத்துக்கு நானும் அம்மாவும்தான் வந்திருந்தோம்,” என்றான் அருணகிரி.

அப்போது, “பாட்டி, தாத்தாவுக்கு டிரங்கால் வந்திருக்கு,” என்று தங்கமணி ஹாலிலிருந்து ரிசீவரை ஒரு கையால் பொத்திக் கொண்டு கத்தினாள்.

“தாத்தா இங்கே இல்லேம்மா, மாடியிலே இருக்காங்களா பாரு,” என்றாள் கல்யாணி.

இதற்குள் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த பொன்னம்பலம் பேத்தியிடமிருந்து ரிசீவரை வாங்கிக்கொண்டு, “ஹலோ...” என்று குரல் கொடுத்தார், அதற்குள் பரமகுருவும் அங்கே வந்து விட்டார்.

“எஸ்... ஸ்பீக்கிங். பொன்னம்பலம்தான் பேசறேன்; சொல்லுங்க.”

"ஆமாம். அந்த ‘பிசினஸ்’ முடிந்து விடும் போலிருக்கா சரி... சொல்லுங்க. என்ன? அறுபது லட்சத்துக்கு குறைக்க முடியாதாமா? சரி! முடிச்சுடுங்க. என்ன? நான் உடனே புறப்பட்டு வராட்டி கை மாறிடுமா? சரி! ராத்திரி ப்ளைட்டிலேயே புறப்பட்டு வர்றேன். வியாபாரத்தை விட்டுடாதீங்க தாங்க்யூ...”