பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

91

காலத்தில் வரும் சீதா தேவிக்கு இங்கு கோயில் கட்டியுள்ளார்கள்.

“ராமாயண காலத்தில் இந்த நுவாரலியாவிற்கு ‘அசோகவனம்’ என்று பெயர். இங்குதான் சீதையை ராவணன் சிறை வைத்திருந்தான். சீதையைத் தேடி வந்த அனுமான், இலங்கைக்கு தீ வைத்ததாக வரலாறு கூறுகிறது. நுவாரலியாவில் பல மைல் பரப்பளவிற்கு இன்றும் அது கறுப்பாக இருக்கிறது. இதற்குக் காரணம் ஆஞ்சநேயர் வைத்த தீதான் என்று பலர் வழிவழியாகக் கூறுகிறார்கள்.

“இயற்கை அழகு கொஞ்சும் அந்த இடத்தை கோடை வாசஸ்தலமாக; அழகிய சாலைகள் அமைத்து உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள் தான்.

“இங்கே தமிழர்கள் தங்கள் உடல் வருத்தம் பாராது, காலம், நேரம் இன்றிய தோட்டங்களில் வேலை செய்து வருகிறார்கள் தேயிலையும் பீன்ஸ் முட்டை கோஸ், கீரை, காய்கறிகளும் பயிராகின்றன.

பாக்கு ஏராளமாகப் பயிராக்கப்படுகிறது கொழும்புப் பாக்கு மிகவும் பிரசித்தம். இலங்கைக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தருவதில் தேயிலைப்போல, பாக்கிற்கும் முக்கிய பங்கு உண்டு.