பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

71

உட்கார்ந்து கொண்டிருக்க அவன் விரும்பவில்லை. பஸ்சை பிடித்து நேராக பொன்னம்பலம் வீட்டிற்கு வந்தான்.

உயரமான இரும்பு கேட்டிற்கு வெளியே நின்றபடி உள்ளே எட்டிப் பார்த்தான். யூனிபார்ம் அணிந்திருந்த சிங்கள கூர்க்கா அரைத் தூக்கத்தில் பீடி பிடித்துக் கொண்டிருந்தான்.

விஜயன் கேட்டை திறந்தபோது பட்டென்று விழித்துக்கொண்டு, “யாரு?” என்று வழி மறித்தான்.

“எஜமானைப் பார்க்கணும்”, என்றான் விஜயன்.

“ஊரில் இல்லை”, என்றான் கூர்க்கா.

“எஜமானி அம்மாளை பார்க்க வேண்டும். ஊரிலிருந்து உறவினர்கள் வந்திருக்கிறார்கள்,” என்றான் விஜயன்.

“யாரும் வீட்டில் இல்லை. அப்புறம் வா” என்று சிடுசிடுத்தான் அவன்.

திரும்பவும் கேட்டை மூடப் போன கூர்க்காவிடம், “எல்லாரும் எப்ப திரும்பி வருவாங்க தெரியுமா?” என்று விஜயன் கேட்டான்.