பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

தென்னைமரத் தீவினிலே...

வரவேற்கத்தான் வந்திருக்காங்க,” என்று கூறிய வள்ளியம்மை அங்குள்ள ஒவ்வொருவரையும் அடையாளம் சொல்லி அவர்கள் எந்த வகையில் தங்களுக்கு உறவினர்கள் என்பதையும் அருணகிரிக்கு விளக்கினாள்.

உடனே அருணகிரி “அப்படீன்னா ஏன் அம்மா அவங்க நம்ம கூட பேசல்லே?” என்றான்.

“அவங்களுக்கெல்லாம் உன் அப்பாவைப் பிடிக்கலே; அது தான் காரணம்.” என்றாள் வள்ளியம்மை. இந்த வார்த்தைகளைக் கூறும் போது துக்கம் தொண்டையை அடைத்தது, கண்களில் நீர் முட்டச் செய்தது

வள்ளியம்மை மிகவும் தாழ்ந்த குரலில் தன் மகனைப் பார்த்தது, “இவர்களில் யாராவது, ஒரு காலத்தில் உன் அப்பாவை வெறுக்காமல் உதவி செய்திருந்தால், நம்முடைய வாழ்க்கையும் எவ்வளவோ உயர்ந்திருக்கும். ஆரம்பத்தில் உன் அப்பாவை ஏழை என்று பிடிக்கவில்லை.

என் அம்மாவே என்னை விட்டுக் கொடுத்து விட்ட பிறகு மற்றவர்களைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?” என்றாள்.

பொங்கி வந்த துக்கத்தை அடக்க மாட்டாமல் வள்ளியம்மை தன் மகனையும் அழைத்துக் கொண்டு, மற்றவர்கள் கண்ணில் படாத