பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

101

“என்ன மாமா?” என்று அருணகிரி ஓடி வந்தான்.

“உன்னுடைய பாட்டி சிங்கப்பூரில் இருப்பது உனக்குத் தெரியுமல்லவா?” என்று கேட்டார்.

“ஓ! அம்மா சொல்லி இருக்காங்க,” என்றான் அருணகிரி.

“இப்போ! அந்த பாட்டிக்கு உன் குரலை கேட்கணுமாம்; உன் கூட பேசனும்னு ஆசையாக இருக்காம்” என்று கூறி போனை அவன் கையில் கொடுத்தார் பரமகுரு.

அருணகிரி ரிசீவரை எடுத்து காதில் வைத்துக் கொண்டு “ஹலோ!” கூப்பிட்டான். “பாட்டி என்று கூப்பிடு!” என்று பரமகுரு மெல்லச் சொல்லிக் கொடுத்தார். உடனே “பாட்டி” என்று அருணகிரி அழைத்தான்.

“யார் அருணகிரியா?” என்று எதிர்முனையிலிருந்து ஞானாம்பாள் கேட்டாள்.

“ஆமாம் பாட்டி! நான்தான் அருணகிரி பேசறேன்! நீங்க நல்லா இருக்கீங்களா? உங்களை எனக்குப் பார்க்கணும் போல ரொம்ப ஆசையா இருக்கு பாட்டி!” என்று கணீரென்று கூறினான்.

“நான் நல்லாத்தான் இருக்கேன் அருணகிரி. உன்னை இத்தனை காலம் நான் பார்த்துக் கொஞ்சக் கொடுத்து வைக்காத பாவியாய் இருந்து விட்

தெ-7