பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தென்னைமரத் தீவினிலே...

தன்னுடைய சொத்து முழுவதையும் சுமார் 50 லட்சம் தேறும் வள்ளியம்மைக்குப் பிறகு பேரன் அனுபவிக்க வேண்டியது” என்று எழுதியிருக்கிறாள்.

அந்த உயிலை என்னிடம் கொடுத்து “உன்னை அருணகிரிக்கு கார்டியனாக எழுதி இருப்பதாகவும்” கூறினாள்.

“யார் அந்தப் பயல்? அங்கே இருக்கிறானா? கொஞ்சம் கூப்பிட்டுப் பேசச் சொல்லேன். நான் ஞானாம்பாள் பிளாட்டிலிருந்துதான் பேசுகிறேன்,” என்று பொன்னம்பலம் பேசிக் கொண்டிருக்கும்போதே வாசலில் கார்கள் வந்து நிற்பதைப் பரமகுரு கவனித்தார்.

உடனே சட்டென்று, “மாமா போனை வைத்துக் கொண்டிருங்கள். அவர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள். அருணகிரியை கூப்பிடவா?” என்று கேட்டார்.

“கொஞ்சம் இரு, நான் இன்டர்காமில் ஞானாம்பாளைக் கூப்பிடுகிறேன்.” என்று கூறி விட்டு அடுத்த சில நொடிகளில் “பரமு! பயலைக் கூப்பிடு! ஞானம் டெலிபோன் லைனில் இருக்கிறாள்.” என்றார்.

அப்போது காருலிருந்து இறங்கி ஒவ்வொருவ ராக உள்ளே வந்துக் கொண்டிருந்தனர். பரமகுரு ஹாலிலிருந்தபடியே, “அருணகிரி!” என்று உரக்கக் குரல் கொடுத்து அழைத்தார்.