பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18
வள்ளியம்மை வந்தடைந்தாள்

ற்றும் எதிர்பாராமல் மேலே பாதி எரிந்து கொண்டிருந்த பெரிய உத்திரம் ஒன்று தடாலென்று லிஸியாவின் மேல் விழுந்து விட்டது.

அடியற்ற மரம் போல் அப்படியே சாய்ந்து விட்ட லிசியாவின் கையிலிருந்த குழந்தை எட்டச் சென்று விழுந்து ‘வீல்’ என்று அலறியது. பளிச் சென்று தாவி குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்ட அருணகிரி, ஒரு கையால் லிஸியாவின் மீது விழுந்துவிட்ட உத்திரத்தைப் பலம் கொண்ட மட்டும் நகர்த்திப் பார்த்தான்.

லிசியாவும் சுயமாக முன்று எழுத்திருக்க முடியாமல்; அவளது இரு கைகளுமே உத்திரத்தின் அடியில் சிக்கிக் கொண்டிருந்தன. தலையில் அடிபட்ட இடத்திலிருந்து ரத்தம் வழிந்தோடியது.

அருணகிரியின் போராட்டத்தைக் காணச் சகியாத லிஸியா முனகிய குரலில், “என்னை மறந்து