பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூற்கட்டுரை, குமரி வேங்கடங் குண குட கடலா மண்டினி மருங்கிற் றண்டமிழ் வரைப்பிற் செந்தமிழ், கொடுந்தமிழ் என்றிரு பகுதியின் ஐந்தினை மருங்கின் அறம் பொருளின்பம் மக்கள் தேவரென விரு சாரார்க்கும் (5) ஒத்த மரபின் ஒழுக் கொடு புணர எழுத்தொடு புணர்ந்த சொல்லகத் தெழுபொருளை இழுக்கா யாப்பின் அகனும், புறனும் அவற்று வழிப்படு உஞ் செவ்வி சிறந் தோங்கிய பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் (10) அரங்கு விலக்கே ஆடப் பெற்றனைத்தும் ஒருங்குடன் தழிஇ உடம்படக் கிடந்த வரியுங் குரவையுஞ் சேதமு மென்றிவை, தெரியுறு வகையாற், செந்தமிழியற்கையில் ஆடி நின் நிழலில் நீடிருங்குன்றம் (15) காட்டு வார்போற் கருத்து வெளிப்படுத்து மணிமேகலை மேல் உரைபொருள் முற்றிய சிலப் பதிகாரம் முற்றும். முதலிரண்டிகளில் தமிழகத்தின் எல்லை கூறப்படுகிறது. அரசியல் பிரிவுகளாக மூன்று முடிமன்னர்கள் ஆண்ட மூன்று மண்டலங்களாகத் தமிழகம் பிரிந்திருந்த போதிலும் தமிழ் நாட்டுப் பண்பாட்டு முறையில் ஒன்றே என்பது ஆசிரியர் கருத்து. மூன்று முதல் ஆறடிகளில் தமிழகத்தின் பண்பாட்டின் இயல்பை விளக்கிக் கூறுகிறார். வழக்கு வேறுபாட்டால் இருவகையாக இருந்த தமிழ் மொழி வழங்கிய பகுதிகளை, செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதி என்று கூறுகிறார். இவ்விரு பகுதிகளிலும் மக்கள் வாழ்க்கை ஐந்து வகைப்பட்டது. மக்கள் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐவகை நிலங்களில் வாழ்ந்தார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கை

90

90