பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

33

முதலில் அறிவியலின் இலக்கணம் கூறுவது போன்ற சான்று காணத்தக்கது.

அறிவியலின் இலக்கணச் சான்று என்பது இங்கு ஒரு சொல்லாகத் திருவள்ளுவரால் ஆக்கப்பெற்றுள்ளது. அறிவியல் என்பதே அறிவின் இலக்கணம், அறிவின் துறை’ என்பனவல்லவா பொருள்? இவ்வொரு சொல் அவர்தம் பட்டறிவால் எழுந்த மூன்று குறட்பாக்களில் முதலில் அமைந்த மக்கட்பேற்றுக் குறளில் உள்ளது.

அறிவறிந்த”

மக்களை ஆணாகவோ, பெண்ணாகவோ பெற்றுவிடும் ஒன்றே பெறுமவற்றுள் பெரும்பேறு ஆகிவிடாது. தலை, கை, கால் முதலிய உறுப்புகளின் நிறைவுடன் குழந்தையைப் பெறுவது மட்டும் இங்குக் குறிக்கப்படவில்லை. எத்தகைய மக்கள் என்றும் சுட்டப்பட்டுள்ளது. எத்தகைய மக்கள்? ஒர் அடைமொழி உள்ளது. "அறிவறிந்த மக்கள்" (61) ஆம் இந்த "அறிவறிந்த" என்னும் அடைமொழிச் சொல் ஆழ்ந்ததும் நுண்ணியதுமான கருத்துடன் அமைக்கப்பட்ட சொல் இச்சொல்லாட்சி திருக்குறளில் மூன்றே குறட்பாக்களில் தான் உள்ளது.

'அறிவறிந்த' என்னும் சொல்லின் பொருள்களாகக் காணப்பட்டவை பின்வருபவை :

"அறியவேண்டுவனவற்றை அறிதல்"இது பரிமேலழகர் கண்ட பொருள். கற்பதில் கற்க வேண்டியவை என்றும் காணவேண்டாதவை என்றும் கொள்ள வகை உண்டு. அதனால்தான் "கற்க கசடற கற்பவை" (391) என்றார். ஆனால், அறிவில் அறியவேண்டுவன, அறியவேண்டாதன