பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கோ. கோவை இளஞ்சேரனார் பகுத் தறிவுக் கோட்பாட்டுச் சின்னம். ஆரவாரமற்ற தமிழியக்கம்; புதுமை நோக்குப் படைப்பாளர்.

'திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை', 'அறிவியல் திருவள்ளுவம்'. பட்டி மண்டப வரலாறு', 'இலந்தை முதல் இன்று வரை' எனும் எழுத்து மலர்கள் முன்னைய 16 வாடாமலர்க் கொத்தில் இணைகின்றன.

திருக்குறள் வகுப்பு, திருச்சி, கோலாலம்பூர், சிங்கப்பூர், கொழும்பு வானொவிப் பொழிவுகள், துற்றுக்கணக்கான இலக்கிய குமுகாயப் பொழிவுகளுடன் முழங்கின. திருக்குறட் களப்பணி குறள் பாப்புப் பணிக்குக் கட்டியம் கூறுகின்றன.

அச்சுத் தொழிலாளி, தமிழாசிரியர், பதிப்புத் துறைத் துணை இயக்குநர் [தமிழ்ப் பல்கலைக்கழகம்] பாடத் தமிழ் நூலாக்க நுண்ணாய்வினர் [பாரதிதாசன் பல்கலைக்கழகம்] முதலியன இவர்தம் வாழ்வோட்ட அலுவலகப் பணிகள்;பொதுப்பணிகள் வனவாழ்வாயின. குறள் நெறி வாழ்தரான இவரின்,

பிறந்த நாள்: கி. ஆ. 1954 மார்கழி 21 (4-1-1923)
பெற்றோர் : ஆத்திருடி அகல உரைகாரர் கோ.வைத்தியலிங்கனார்
வை. மீனாட்சியம்மாள்
இடம் : செட்டிநாட்டுக் கல்லல்
இங்கனம், இக்சான்றோனின் தமிழ் மாணவன் புலவர் இர. இராமதாசு, எம்.எ.