பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பூக்களின் சிறப்பு

தமிழ் நாட்டில் பூக்களுக்கிருந்த சிறப்பான ஆசிரியர் பட்டியலிட்டுக் காட்டியிருப்பது எண்ணி மகிழத்தக்கதாயுள்ளது.

1. தமிழர் நிலங்கட்கு அவ்வந் நிலங்களில் விளங்கிய சிறப்பான பூவைக் கொண்டே பெயரிட்டுள்ளனர். (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்)

2. புறத் திணைத் துறைகள் பூக்களின் பெயர்களாலேயே அமைக்கப்பட்டுள்ளன. (வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி உழிஞை, நொச்சி, தும்பை, வாகை.)

3. அரசர்களின் சின்னங்களாய்ப் பூக்கள் சிறக்கின்றன. சோழர் - ஆத்திப்பூ; பாண்டியர்-வேப்பம் பூ; சேரர் - பனம் பூ)

4. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பூவை விருப்பப் பூ ஆக்கினர். (சிவன் - கொன்றை; முருகன் - கடம்பு; திருமகள் -ஆம்பல், கலைமகள் - வெண்டாமரை, அருகன் - அசோகு: புத்தன் - தாமரை.)

5. தமிழ் மன்னர்கள் அளித்த சிறந்த பரிசுப் பொருள்கள் பூக்கள் வடிவில் செய்யப்பட்டன (பொற்றாமரை)

6. உயர்ந்த பட்டங்கள் பூக்களின் பெயர்களால் கொடுக்கப் பட்டன. (எட்டி, காவிதிப் பட்டங்கள்.)

7. மக்கள் அணிவதிலிருந்து நாள் முழுவதும் செய்யும் செயல்களிலெல்லாம் பூக்கள் சிறப்பிடம் பெறுகின்றன.


பருவம், உறுப்பு, குணம்.

பூக்களின் வரலாறும் சிறப்பும் கூறிய ஆசிரியர் அடுத்து அவற்றின் அமைப்பு, குணம் ஆகியவற்றைத் தொகுத்துரைத் துள்ளார்.

1. பூக்களின் பருவங்கள் ஏழு (நணை; அரும்பு, முகை; போது; மலர்; அலர்; வீ.)

2.உறுப்புகள் ஏழு (காம்பு, அல்லி, சூலகம்; ழகரம் தாது; தேன்.)