பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அல்லாதவர்க்கு ஒப்பாக்கினர். இதனினும் ஒருபடி மேலேபோய், புன்மக்களுக்கு உவமையாக்கி,

 "நாறாத் தகடே (புறஇதழ்) போல் நன்மலர்மேல்பொற்பாவாய்
 நீறாய் நிலத்து விளிவரோ?-வேறாய்
 புன்மக்கள் பக்கம் புகுவாய்; நீ பொன்போலும்
 நன்மக்கள் பக்கம் துறந்து"51 -எனப் பாடினர். என் உறுப்பு

ஒன்றைத் தாழ்த்துவது என்னையே தாழ்த்துவதாகும்.


இவை கிடக்க, ஏழு எண்ணிக்கைகொண்டு எனது உறுப்பு வரலாற்றை இவ்வகையில் நிறைவேற்றிக்கொள்கின்றேன்.

சிறுவாய் மலர்ந்த பாடலின் ஒருசொற்கொண்டும் அச்சொல்லின் அடுக்குகொண்டும் எனது பெயரையும் பருவங்களையும் உறுப்புகளையும் விளக்க முடிந்தது. இப்பாடலின் முதல் தொடர் எனது வரலாற்றின் இரண்டாவது படலத்திற்குத் தலைப்பு ஆகின்றது. ஆம், 'பூவோ பூ'. இத்தொடர் எனது குணத் தன்மைகளின் மாணிக்கச் சுருக்கம்.

குணம் பத்து.

நாட்டுப் பாடலைப் பாடிய சிறு குழந்தையின் உள்ளத்தில் என்னைக் கண்டதும் ஒரு வியப்பு அரும்பியது போலும். அந்த வியப்பின் வெடிப்பாக,

"பூவோ பூ"- என்று தன்னையும் அறியாமல் முழக்கியது. ஆம், நான் வியப்பான உணர்வை எழுப்பும் தன்மைகளைப் பெற்றுள்ளேன். "பணம் பத்தும் பண்ணும்’ என்பர். நான் குணம் பத்தும் கொண்டுள்ளேன்.

  1. மணம் - உயிர்

குணங்களிலும் மணம் எனது உயிர். மணம் இன்றேல் நான் பினம். நான் பிணம் அன்று என்பதை மணம் தான் உரைத்துக்கொண்டுள்ளது. "ஆம், அப்படித்தான்" என்று சொல்வது போன்று,

51 நாலடி : 266,