பக்கம்:பாரதி லீலை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அங்க்ே அலகாபாத் சர்வகலாசாலைச் சார்பில் எண்டரன்ஸ் வகுப்பில் சேர்ந்தார். அலகாபாத் சர்வகலாசாலையில் தாய்மொழி சம்ஸ்கிருதமாகக் கொள்ள வேண்டியதாயிற்று. அதுவரை பாரதி யார் ஸ்ம்ஸ்கிருதத்துக்குப் புதியவர். எனினும் அவர் சம்ஸ்கிருதம் தாய் மொழியாகக்கொண்டு அலகாபாத் சர்வகலாசாலைப் பரிசைடியில் தேறி ஞர். காசியிலே ஒரு வருஷம்தான் பாரதியார் வசித்தார் ; அதன் பிறகு சில அசெளகரியங் களால் 1902-ம்வருஷம் எட்டயபுரம் திரும்பினர். 1902-முதல் 1904-ம் வருஷம்வரை பாரதியார் எட்டயபுரத்திலிருந்தார். அப்பொழுது எட்டய புரம் சமஸ்தானதிபதி அவருக்கு ஒர் உத்தியோக மளித்து ஆதரித்துவந்தார். இப்படியிருக்கையில் எட்டயபுரம் மன்னருக்கும் பாரதியாருக்கும் மனஸ்தாபம் ஏற்படவே பாரதியார் வேலையை விட்டு நீங்கினர் ; மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் அதன்பிறகு சில மாதம் தமிழ்ப் பண்டிதராயிருந் தார். அப்பொழுது சென்னேயில் பூரீமான் ஜி. சுப்பிர மணிய அய்யர் : சுதேசமித்திரன்' பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார். பாரதியார் கஷ்டப் படுவதைக் கேட்டார் பாரதியின் மாமா லக்ஷ்மண அய்யர் என்பார். உடனே அவர் பூரீமான் ஜி. சுப்பிரமணிய ஐயரிடம் பாரதியாருக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/59&oldid=816579" இலிருந்து மீள்விக்கப்பட்டது