பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64


தாயின் மடியிலிருந்து நீங்கியுள்ளேன். நீங்கினாலும் "நாறு கமழ் வீயும்"28 என்றபடி மணங் கமழ்வதில் நீங்கவில்லை. "செல்நீர் வீ வயின் தேன்சோர"29 என்றபடி தேன்வழிவதில் நீங்கவில்லை. "வேங்கையின் ஒள் வீ"30 என்றபடி வண்ண ஒளியில் நீங்கவில்லை. என்னை நீங்கிய தாய்தான் புலம்படைந்தாள் அவள் தனிமையாகித் துன்பமுறுவோருக்கு உவமையாக.

"பூ வீ கொடியின் புலம்படைந் தன்றே" 31 எனப்பட்டாள்

என்றாலும், தாயை விட்டு நீங்கி வீழ்ந்த வகையில் எனது வாழ்வின் இறுதிப் படுக்கையில் படுத்துவிட்டேன் என்பது உண்மையே. வாழ்வியலில் வீழ்ந்தது வீழ்ந்ததுதான். மற்றைய ஆறு பருவங்களும் பிறப்பிலிருந்து பிறந்த இடத்தோடு ஒன்றிய பருவங்கள். இப்பருவம் "வீ" ஒன்றியது அன்று. ஆகையால் தனித்து நிற்கும் பருவமாகின்றது, இவ்வாறு தனித்துப் பிரித்துப் பார்க்கத் தொல்காப்பியமும் இடம் வைத்துள்ளது. தொல்காப்பியத்தில் முன்னேர் காட்டிய ஏழு இடங்களில் ஏழாவது நூற்பாவை நினைவு கூர்ந்தால், அதில் என்னைக் குறிக்கும் பொதுப்பெயர் 'பூ' நேரடியாக இடம் பெறாமல் பூக்கும் தொடர்பில் மகளிர்க்கு நேரும் பூப்பைக் குறிக்கும் சொல் அமைந்துள்ளதைக் காணலாம். ஆறு இடங்களிலிருந்து வேறுபட்டு நீங்கி நிற்கும் இந்நூற்பா என் ஏழாவது பருவத்தின் தனிமையைக் காட்டுவதாக அமைந்துள்ளது இதற்குரிய குறிப்பை அங்கும் கூறியுள்ளேன்.

எனது பருவம் எதற்கும் கூறப்படாத அடைமொழி ஒன்று இப்பருவத்திற்குமட்டும் கொடுக்கப்படும். அது "முது"32 என்பது எனக்கு முதுமைப் படுக்கை - இறுதிப் படுக்கை விரிக்கப்பட்டது.

எனவே,

வீ. பருவம் இறுதிப் பருவம்.

      //என்றும் புதுமை//

எனது ஒவ்வொரு பருவத்திலும் புதுமைப் பொலிவுடன் விளங்குவேன். அதனால், புதுமை அடைமொழியுடன் பேசப்படுவேன். இறுதிப்படுக்கையில் வீழ்வதற்குக் கழன்று ஒட்டி நிற்கும் போதும் மணம், வண்ணம் எழில் முதலியன வீழாமல்

-------------------------------

28 பரி : 8 : 99 31 நற் : 218 : 2

29 கலி: 41 : 11 32 புறம் 807 - 5

30 பரி 16 : 42