பக்கம்:பாரதி லீலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதிரியார் பாராட்டு “ விளையும் பயிர் முளையிலே தெரியும் ” திருநெல்வேலி ஜில்லாவில் நாளரெக் என்று ஒர் ஊர் இருக்கிறது. அந்த ஊரிலே ஒரு பாதிரி யார் வசித்து வந்தார். அவர் பெயர் ரெவரண்டு ஏ. கானன் மெகாவியஸ் என்பது. அவர் அக் காலத்தில் இருந்த பிரைமரி போர்டு தலைவரா யிருந்தார். அந்தப் பிரைமரி பரீசை, எழுதி சர்டிபிகேட் வாங்குவது ஒரு பெரிய கெளரவ மென்று அக்காலத்திய இளைஞர்கள் எண்ணினர் கள். ஆதலினலே ஏராளமான பேர்கள் அப் பரீ கூைடிக்குப் போவதுண்டு. பாரதிக்கும் அந்தப் பரீrை, பாஸ் செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. அப்பொழுது எட்டயபுரத்தில் ஏ. வி. ஸ்கூல் என்று ஒரு பள்ளிக்கூட மிருந்தது. சங்கர ஐயர் என்பவர் அந்தப் பள்ளிக்கூடத்தின் எட்மாஸ்டர். அவரிடம் பாரதியார் தமது விருப் பத்தைத் தெரிவித்தார். அவரும் பாரதியாரின் விருப்பத்துக் கிணங்கிச் சில மாணவர்களுடன் பாரதியாரையும் பரீசைடிக்கு அனுப்பினர். அந்த வருஷத்திலே சுமார் இருநூறு பேர் அந்தப் பரிசைடிக்குச் சென்றனர். எல்லாரும் சாத்துனரில் மேற்படி பாதிரியார்முன் ஆஜரானுர். ஒவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/39&oldid=816557" இலிருந்து மீள்விக்கப்பட்டது