பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9. உலகிற்கு அமைந்த தமிழ்ச் சொற்களின் பாங்கை நோக்கினுலும் உலகம் ஒரு நீர்ப் பூ. அறிவியல் செடியில் அலரும் பூ உலகத்தை மேல் உலகம், கீழ் உலகம் எனப் பிரிக்கின்றனர் ஆன்ம இயலார். இது மேல் கீழ் என்னும் உயர்வு தாழ்வுக் குறிப்பு. அறிவியலார் மேல்நாடு, கீழ்நாடு எனக் குறிக்கின்றனர். இது மேற்கு, கிழக்கு என்னும் திசைவழிப் பாகுபாடு. ஆன்ம இயல் குறிக்கும் இரண்டு உலகங்களிலும் பூக்களுக்கு நிறைவான இடம் உண்டு. மேல் உலகில் திருமரங்கள் ஐந்தாம். அவை சந்தானம், அரிசந்தானம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம் என்பர். இவற்றின் பூக்கள் ஒவ்வொரு வகையில் வியப்புத் தன்மை கொண்டவையாம். பொன்னாக, மணியாக, மாணிக்கமாகப் பூத்தல், நினைக்கும் மணம் கமழ்தல், சூடினால் உருமாறுதல், அணிந்தால் வெற்றி பெறுதல் என்றெல்லாம் கற்பனையின் மேல் எல்லை வரை வியப்பில் பூப்பவை. இப்பூக்கள் இவ்வுலகிற்கும் அருளப்பட்டன; இறக்குமதியாயின; கடத்தப்பட்டன என்பவற்றிற்கெல்லாம் கதைகள் உள்ளன. தனது இரு தேவிமார்களுக்கிடையே நேர்ந்த பூசலைத் தீர்க்கக் கண்ணன் மேலுலகப் பாரிசாத மலரைக் கொணரச் செய்தான் -என்பது பாகவதக் கதை. “................ தன்யூ மரத்தினை அன்னதன் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னுல் வன்மையைப் பாடிப்பற’’26

-என்னும் பெரியாழ்வார் பாடல், மலர் கடத்தப்பட்ட கதையைக் குறிப்பது.

'திரெளபதிக்காக வீமன் மேல் உலகம் சென்று ஒரு பாரிசாத மலரைக் கொணர்ந்தான்’ என்கிறது பாரதக் கதை. 26 பெரி. திரு:6:3.