பக்கம்:பாரதி லீலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் மொழி

  • இரவி யெழுந்ததுமுதல் எற்படுவரை இவ்வுலகு கின்புகழ் கேட்பதாக ”

--மெகாலே லக்ஷ்மணசிங் தேவோ என்பவர் ஒருபெரியார்; ஆரிய ஸ்மாஜி ; நேபிள்ஸ், ரோம் ஆகிய பலவிடங் கள் சுற்றியவர் ; ஆபிரிக்காவில் வசித்திருந்தார் ; போயர் யுத்தத்தின்போது அங்கிருந்து புறப்பட் டுக் கொழும்பு மார்க்கமாக எட்டயபுரம் வந்தவர். அவரது இயற்பெயர் இன்னதென்பது யாருக்கும் தெரியாது. 1899 முதல் 1902 மார்ச்சுவரை அவர் எட்டயபுரத்தில் வசித்துவந்தார். அவர் தாடி வளர்த்திருப்பார். பாரதியார் அவரை மிஸ் டர் பார்பா என்று கூப்பிடுவார். பார்பா ! என்ருல் தாடி என்றுபொருள். அங்கே அள வளாவிக் கொண்டிருந்த பாரதியாரைப் பார்த்த தும் இவர் இன்னும் சிலகாலத்திற் கெல்லாம் சர்க்கார் தொல்லைக்கு ஆற்ருது அஞ்ஞாதவாசம் செய்வார். அதன் பின்பு இவரது புகழ் மிக் கோங்கும் ” என்ருர் லக்ஷ்மண சிங். அவ்வாறு சொல்லக் காரணம் என்னவென்று விசாரிக்கப் பட்டது. என்னவோ எனக்குத் தோன்றிய தைக் கூறினேன் ' என்ருர் லக்ஷ்மண சிங். ஆனல் பிற்காலத்திலே தான் அது உண்மையாகி விட்டதே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/35&oldid=816553" இலிருந்து மீள்விக்கப்பட்டது