பக்கம்:பாரதி லீலை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுதையை முத்தமிட்டது புதுச்சேரி வாளம் பாரதியாரைப் பெரிய ஞானியாக்கியது எனலாம். புதுவையிலிருந்து வெளிவந்ததும் பாரதியார் ஜீவன்முக்தராக விளங்கினர். ஸ்ர்வமும் ஈசுவராம்சமாகவே அவருக்குத் தோன்றியது. கடையத்திலே இருக் கும் பொழுது ஒரு நாள் ஒரு கழுதையைக் கண் டார் பாரதியார். அதனிடம் சென்று அதை அன்புடன் கட்டியணேத்துத் தழுவிக் கொண்டு முத்தமிட்டார். அது கண்டு அவரைப் பரிகசித் தவரும் உண்டு. ஆனல் அந்த ஜீவன்முக்கரின் செயல்களின் உயர்வையும், அவற்றின் உன்னத தத்துவங்களையும் அறிந்து போற்றக் கூடியவர் வெகு சிலரேயன்ருே ? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/54&oldid=816574" இலிருந்து மீள்விக்கப்பட்டது