பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2 ஒரு பிரிவுக் காதலன் கெஞ்சுகின்றான் :

     'கருமுகிலே! எனக்காக எனது காதலிபால் தூது செல்லும் எனது தோழனே! என்மேல் கொண்ட பரிவால் நீ விரைந்து செல்வாய். ஆனாலும், வழியில் உள்ள மலைகளில் பூத்துக்குலுங்கும் புது மல்லிகையின் மணம் உன்னைத் தடுத்து நிறுத்தும். அந்த மனத்தில் ஈடுபட்டுக் காலங் கடத்தி விடுவாயோ என்று எதிர் பார்க்கின்றேன். அருள் கூர்ந்து விரைந்து செல்க!'2
   இது கருமுகிலத் துரதனுப்பும் காதலனது ஏக்கக் குரல். இக்குரல் மேகதூதம்’ என்னும் மேடையில் ஒலித்தது. குரலைத் திறந்தவர் கவி காளிதாசர். இத்திறப்பில் மல்லிகைப் பூவின் மணச்சிறப்பு ஒலிக்கிறது. இது மணச்சிறப்பு மலர், வட மொழி மணம்.
      தெய்சி’ என்ற பூ மலர்ந்து நீல, ஊதா வண்ணங்களை வழங்கும் போதும், லேடி சுமோக்குபூத்துப் பளபளக்கும் வெண்மை வண்ணத்தை வழங்கும் போதும் கக்கூ பட் - பூத்து மஞ்சள் வண்ணத்தை வழங்கும் போதும் பசுந்திடலுக்கு மெருகேற்றி மகிழ்ச்சி ஏற்றுகின்றன’3
  இது 'கல்விமான்' என்று அறிமுகமானவன் இசைத்த பாடலின் கருத்து. 'காதற் கூத்தின் இழப்பு’ என்னும் நாடகத் தின் இறுதிக் காட்சியில் இசைக்கப்பட்டது. இசைக்க வைத்தவர் மாகவி சேக்சுபியர். இந்த இசைப்பில் பல பூக்களின் வண்ணச் சிறப்பு ஒளிர்கின்றது. இது வண்ண மலர்; ஆங்கில வண்ண்ம்.
  மென்மை, பூவின் இயல்புத் தன்மை.
  மணம், சிறப்புத் தன்மை.
  வண்ணம், அழகுத் தன்மை.
  பூவின் தன்மைகள் மேலும் பெருகியனவாயினும் அவற்றிற்கெல்லாம் இவை மூன்றும் அடிப்படையாக நிற்பவை, பூவின்
 2 மே, தூ: பாகம் 1: செய்யுள் 23
 3 LOVE’s LABOUR's LOST.