பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

ஆனால் இப்போது-

வானம் அந்த நீராவியை மழையாக மாற்றி அனுப்பியபோது பூமி அன்னை அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருந்தாள்.

இரவும் பகலும் தோன்றி, பருவ மழைகளும் காலம் காலமாகப் பூமியில் பொழிந்து கொண்டிருந்த போது, மண்ணில் மரம் செடி கொடிகள் முளைத்துக் காடுகள் பிறந்தன. உயிரினங்கள் பெருகின. மனிதன் பிறந்தான். அறிவு விரிந்தது. விஞ்ஞானம் பெருகியது.

இன்று மனிதன்-மண்ணிலிருந்து விண்ணுக்குத்தாவும் மகத்தான ஆற்றல் பெற்றவனாகத் திகழ்கிறான்.

தன் மடியில் தவழும் குழந்தையின் அழகைக் கண்டு பெற்ற தாய் ரசிப்பது போல-

பூமி அன்னையும் தன் மடியில் பிறந்த மக்களின் அறிவியல் ஆற்றல்களைக் கண்டு அகமகிழ்ந்து சிரிக்கிறாள்” என்று கூறிக் கதையை முடித்த கங்காதரன் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு தன் சகோதரர்களுடன் புறப்பட்டான்.