பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

"ஜோஸப் பிரீஸ்ட்லி" என்னும் ஆங்கில விஞ்ஞானி, உலகில் உயிர் வாழ அத்தியாவசியமாகத் திகழும் வாயுவின் பல தன்மைகளை ஆராய்ச்சி செய்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளின் இறுதியில் "லாவாய்ஸியர்" என்னும் பிரெஞ்சு விஞ்ஞானி இந்த வாயுவுக்குப் "பிராணவாயு" (ஆக்ஸிஜன்) என்னும் பெயரைச் சூட்டினார்.

பூமியைச் சுற்றியுள்ள காற்றுக் கலவையில் நைட்டிரஜன் வாயு 78.084 சத விகிதமும்; பிராண வாயு 20.946 சதவிகிதமும், ஆர்கான் வாயு 0.934 சதமும், கரியமிலவாயு 0.033 சதவிகிதமும்: நியான், ஈலியம், சிரிப்பான், மிதேன், நீரக வாயு போன்ற பலவகையான வாயுக்கள் கூட்டாக கரியமிலவாயுவின் சத அளவிற்குக் காற்றில் கலந்துள்ளன.

இவைதவிர, கந்தக அமிலம், நீராவி, ஓகோன், புகைக்கரி, தூசி, தும்பு, உப்புத் திவலைகள், நுண் தாவரங்கள், நுண் உயிர்கள் ஆகியவையும் பரவலாகக் கலந்துள்ளன.

மற்றெந்த வாயுக்களையும் விட, பிராண வாயு ஒன்று மட்டும் இல்லாவிட்டால், உயிரினங்கள் மட்டுமல்ல; தாவரங்கள் கூட உயிர் வாழ முடியாது.